மகளுக்காக கொலை செய்யும் சிவகாமி.. சந்தியா எடுக்கப் போகும் முடிவு..? எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: ராஜா ராணி சீரியலில் மார்ச் 30ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் சிவகாமி தன்னுடைய மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பார்வதியின் முன்னாள் காதலனை கொலை செய்கிறார்.
நியாயத்துக்காக போராடும் சந்தியா இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற புது பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

குழந்தையை மாற்றிய அர்ச்சனா
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இத்தனை நாட்களாக அர்ச்சனா குழந்தையை மாற்றிய விஷயம் வீட்டிற்கு தெரியாமல் இருந்த நிலையில், தற்போது குழந்தையை திடீரென்று சிலர் கடத்திக் கொண்டு சென்றதால் அர்ச்சனா தன்னுடைய குழந்தையின் ரகசியத்தை பற்றி வீட்டில் சொல்லி அதனால் பெரிய பிரச்சினையே ஏற்பட்டு கடைசியில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட இருக்கிறார். தன்னுடைய குழந்தையை மாற்றிய விஷயத்தை கேட்டு செந்தில் இன்னமும் அர்ச்சனா மிது கோபத்தில் தான் இருக்கிறார்.

பார்வதிக்கு புது பிரச்சனை
இந்த நிலையில் அடுத்த பிரச்சனைக்கான புது ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் பார்வதியால் அசிங்கப்பட்டு ஜெயிலுக்கு போன அவளுடைய முன்னாள் காதலன் தண்டனை முடிந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து பார்வதியை மிரட்டிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் பார்வதிக்கு போன் செய்து அவளை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறான்.

சந்தியாவிற்கு தெரியாது
ஒரு கட்டத்தில் பார்வதி அனைத்து விஷயங்களையும் தன்னுடைய கணவரிடம் சொல்லி விடுகிறார். இதனை சந்தியாவிடம் சொல்ல வேண்டும் என்று இருவரும் முயற்சி செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதால் இதைப் பற்றி சொல்ல முடியாமல் போகிறது.

பார்வதிக்கு மிரட்டல்
இந்த நிலையில் பார்வதியின் கணவனை முன்னாள் காதலன் கடத்தி வைத்துக்கொண்டு அவரை அடித்து துன்புறுத்துகிறார். அப்போது அங்கே வரும் பார்வதி இடம் உனது கணவனை விட வேண்டும் என்றால் நான் சொல்கிறதை நீ செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.அதற்கு பார்வதியும் சரி என்று கூறுகிறார்.பின் தனக்கும் பார்வதிக்கும் முதலிரவு ஏற்பாடு செய்து பால் கொண்டு தருமாறு கூறுகிறான்.

கொலை செய்த சிவகாமி
இந்த நேரம் பார்த்து அவளை வலுக்கட்டாயமாக அடைய முயற்சிக்கும் போது பார்வதியின் மானத்தைக் காப்பாற்ற வில்லனின் தலையில் சிவகாமி அடித்துக் கொலை செய்கிறார். இந்த நிலையில் இனி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வம் அனைவரிடமும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சந்தியா ஒரு ரவுடியை என்கவுண்டர் செய்ததற்கு அத்தனை ஆர்ப்பாட்டம் செய்த சிவகாமி இப்போது தன் கையாலே ஒரு கொலை செய்திருக்கும் நிலையில் இனி சிவகாமி என்ன முடிவெடுக்கப் போவார் என்பதும் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications