இணையத்தை அலற விடும் ராஜா ராணி புது சந்தியா..மாடர்ன் உடையில் தாறுமாறான புகைப்படங்கள்..ஆரம்பமே இப்படியா

ராஜா ராணி சீரியல் புது சந்தியாவாக நடிக்கும் ஆஷா கவுடா போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் புது சந்தியாவாக நடிகை ஆஷா கவுடா நடித்து வருகிறார்.

நடிகை ஆஷா கவுடா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் ஆஷா கவுடா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கோகுலத்தில் சீதை சீரியல்

கோகுலத்தில் சீதை சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் மூன்றாவது முறையாக சந்தியாவாக நடிகை ஆஷா கவுடா அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் வசு கேரக்டரில் நடித்து வந்தார். வசு மற்றும் அர்ஜுன் கேரக்டரில் நடித்து வந்த டான்ஸ் மாஸ்டர் நந்தாவின் காதல் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் மத்தியில் அதிகமாக ஆரம்பத்தில் கவர்ந்தது. ஆனால் இந்த சீரியல் நாட்கள் போகப்போக கதையே இல்லாமல் பயணிப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் திடீரென இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு பிறகு இரண்டாவது பாகம் கிராமத்தில் இருந்து திடீரென தொடங்கினார்கள். அது அந்த அளவிற்கு வரவேற்பு பெறாத நிலையில் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

போட்டோ சூட் புகைப்படங்கள்

போட்டோ சூட் புகைப்படங்கள்

சீரியலில் நடிகையாக மட்டுமல்லாமல் ஆஷா கவுடா மாடலிங் செய்து வருகிறார். அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரவி விட்டு பரபரப்பை ஏற்படுத்துவது இவருடைய வழக்கமாக இருக்கிறது. மார்டன் உடையில் மட்டுமல்லாமல் தாவணியிலும் புடவையிலும் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து குவித்து தன்னுடைய ரசிகர்களை தன்னை விட்டு எந்த பக்கமும் போய்விடாமல் கட்டி இழுத்து வைத்திருப்பதில் இவர் கவனமாக இருந்து வருகிறார்.

தேடப்படும் நடிகை

தேடப்படும் நடிகை

இந்த நிலையில் ராஜா ராணி சீரியலில் இவர் போலீஸ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவருடைய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பார்த்து இளைஞர்கள் சொக்கிப் போய் இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஆஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறு மாறாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆஷா கவுடா, தற்போது ராஜா ராணி சீரியலுக்குப் பிறகு அதிகமான ரசிகர்களால் தேடப்படும் ஒரு நடிகையாக இருக்கிறார்.

அதிகரித்த பாலோவர்ஸ்

அதிகரித்த பாலோவர்ஸ்

இந்த நிலையில் இவருடைய instagram புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என்று கேள்வி எழுப்பி அதிகமான பேன்ஸ் பேஜ்களை திறந்து வருகிறார்கள். விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் அறிமுகமாகி இரண்டு நாட்களில் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர். தற்போது வரைக்கும் இன்ஸ்டாகிராமில் இவருடைய பாலோவர்ஸ் 530K பாலோவர்ஸ் இருக்கின்றனர்.இவர் வெளியிட்டது வெறும் 44 போஸ்ட் ஆக இருந்தாலும் அதில் அனைத்துமே அதிகமான லைக்குகளை பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+