Rajakumaran: "எங்க கல்யாண போட்டோவே இல்ல!" ஆள் வச்சி அடிக்க வந்தாங்க! இயக்குனர் ராஜகுமாரன் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகை தேவயானி மற்றும் இயக்குனர் ராஜகுமாரன் ஆகியோரின் காதல் மற்றும் திருமணம், பல வருடங்களுக்குப் பிறகும் ஒரு பேசுபொருளாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு நேர்காணலில் ராஜகுமாரன், தங்கள் திருமணம் நடந்த விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தேவயானி, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
காதல் தொடங்கிய கதை
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜகுமாரன், பின்னர் 'நீ வருவாய் என' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோருடன் இணைந்து தேவயானி நடித்திருந்தார். இந்த படப்பிடிப்பில்தான் ராஜகுமாரன் மற்றும் தேவயானிக்கு இடையே காதல் மலர்ந்தது. குடும்பம் மற்றும் சினிமா துறையில் இருந்த எதிர்ப்பு காரணமாக, இருவரின் காதலும் ரகசியமாகவே இருந்தது.

திருமணமும், மிரட்டல்களும்
ராஜகுமாரன் பேசுகையில், "எங்கள் திருமண இடம் குறித்து தேவயானியிடம் கூட நான் சொல்லவில்லை. திருப்பதியில் திருமணம் செய்து கொள்வதாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு, திருத்தணியில் திருமணம் செய்துகொண்டோம்" என்றார். "என்னுடைய குருநாதர் விக்ரமன் சாருக்கு எங்கள் திருமணம் பற்றித் தெரியும் என்று பலர் நினைத்தார்கள். ஆனால், அவருக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார்.
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு படத்தின் கதை குறித்து ஒரு ஹோட்டலில் விக்ரமன், ராஜகுமாரன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சந்தித்ததுதான், இந்த வதந்திகளுக்குக் காரணம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
நேரடி மிரட்டல் இல்லை
"எங்கள் திருமணத்தை நேரடியாக யாரும் தடுக்க வரவில்லை. ஆனால், பலர் பிரச்சனை கொடுப்பதாக எனக்குத் தகவல் வந்தது. ஆனாலும், 'கல்யாணம் நடந்தா போதும், எது வந்தாலும் பார்த்துக்கலாம்' என்று எனக்கு தைரியம் இருந்தது" என்று ராஜகுமாரன் குறிப்பிட்டார்.
போட்டோ இல்லாத திருமணம்
இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. அப்போது, ராஜகுமாரனின் வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது ஃபிலிம் மாடல் கேமராவில் சில புகைப்படங்களை எடுத்திருந்தார். "எங்கள் கல்யாணப் புகைப்படங்கள் இப்போது வரை எங்களிடம் இல்லை. யாரோ அந்த ஃபிலிமை பிடுங்கி வீசி எறிந்து இருக்கிறார்கள்" என்று ராஜகுமாரன் வருத்தத்துடன் கூறினார். இந்தப் பேச்சைக் கேட்கும்போது, ரசிகர்கள் தேவயானி - ராஜகுமாரன் சந்தித்த போராட்டங்களை உணர்ந்து கண்கலங்கிப் போனார்கள்.
திருமணத்திற்குப் பிறகு, விக்ரமன் சார் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்ததாகவும், தேவயானியின் குடும்பத்தினரும் சமாதானமானதாகவும் ராஜகுமாரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தேவயானி - ராஜகுமாரன் தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இத்தனை வருடங்களுக்குப் பிறகும், இவர்கள் காதலித்து திருமணம் செய்தது தமிழ் சினிமாவில் ஒரு அரிய காதல் காவியமாகவே இன்றும் கருதப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications