நான் சொல்றதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிறீங்க! சாமி படத்தில் கவனிச்சீங்களா? விக்ரம் நடிப்பு சரியில்ல! ராஜகுமாரன் பேட்டி
சென்னை: சமீபகாலமாகவே இயக்குனரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் ட்ரோலில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவர் பல நடிகர்கள், இயக்குனர்களை விமர்சித்து பேசி வரும் நிலையில் இவர் எத்தனை படங்கள் இயக்கிவிட்டார்? இவர் எத்தனை படத்தில் ஹீரோவாக நடித்து ஜெயித்து விட்டார்? என்றெல்லாம் பலரும் வசைப்பாடி வரும் நிலையில் இப்போது தன்னை பற்றிய ட்ரோலுக்கு ராஜகுமாரன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
ராஜகுமாரன் ஏற்கனவே மகேந்திரன், கமல்ஹாசன் போன்றோர் பற்றி பேசி பலருடைய கோபத்தை சம்பாதித்திருக்கும் நிலையில் நடிகர் விக்ரம் பற்றியும் பேசியிருந்தார். விக்ரமுக்கு மேக்கப் இல்லாமல் நடிக்கவே தெரியாது . அவரால் அவருடைய ஒரிஜினல் கேரக்டரில் நடிக்க முடியாது, மற்ற ஒரு நடிகரை போல தான் அவர் நடித்துக் கொண்டு இருப்பார் என்றும் அவருக்கு ஆக்சன் காட்ட எல்லாம் சரியா வராது என்று பேசி இருந்தார்.

இதனால் பலரும் ராஜகுமாரனை ட்ரோல் செய்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தான் எதற்காக விக்ரம் பற்றி அப்படி பேசினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி அவர் பேசும்போது நான் சொல்லுறதை நீங்க தான் சரியா புரிஞ்சுக்கல. நான் விக்கிரமுக்கு சரியா நடிக்க தெரியலன்னு சொன்னேன். அதற்கு காரணம் நான் அவரை சினிமாவில் மட்டும் பார்க்கல, அவரோடு பணியாற்றி இருக்கிறேன்.
சாமி படத்தில் விக்ரம் நடிப்பை கவனிச்சீங்களா அந்த படம் செமையா ஹிட் ஆச்சு ஆனால் அந்த படத்தில் அவருடைய ஸ்டைல் எங்கே இருக்கிறது? அவர் அவருடைய நிஜ ஸ்டைலில் அந்த படத்தில் நடிக்கவே இல்லை. அந்த படத்தில் பாதி இடத்தில் ரஜினி ஸ்டைலையும், பாதி இடத்தில் கமல்ஹாசன் ஸ்டைலையும், தான் காப்பி பண்ணி நடிச்சிருந்தாரு. விக்ரம் நடிப்பை அந்த படத்தில் அவர் காட்டவே இல்லை. அதைத்தான் நான் அவருக்கு நடிக்க தெரியாதுன்னு சொன்னேன்.
புதிய தலைமுறைகள் படத்தில் நாங்க முழுக்க பணியாற்றி இருக்கிறோம். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் அவரை வைத்து நான் இயக்கினேன் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போது அவருக்கு எப்படி நடிக்க வரும், எப்படி நடிக்க வராது என்கிறது எனக்கு தெரியும். அதைதான் நான் சொன்னேன். ஆனால் சிலர் என்னைப் பற்றி தவறாக பேசிட்டு இருக்காங்க.
இவரு நடிச்சு ஆஸ்கார் அவார்டு வாங்கிட்டாரா? எப்படி இவரு அடுத்தவங்களை குறை சொல்லலாம்னு கேட்குறாங்க. நான் அவார்ட் எல்லாம் வாங்கல ஆனா என்னோட கருத்தை நான் சொல்லுறேன் அவ்வளவு தான். நான் அடுத்தவங்களை பத்தி பேசல, என்னோட கருத்து இவங்க கிட்ட இது சரியில்லன்னு சொல்லுறேன் என்று ராஜகுமாரன்
விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே ராஜகுமாரன் இயக்குனர் மகேந்திரன், பாலு மகேந்திரா, கே பாலச்சந்தர், வெற்றிமாறன் போன்றோரின் படங்கள் பற்றி விமர்சித்து பேசி இருந்தார். மகேந்திரன் எடுத்த படங்கள் எல்லாம் ஒரு படமா? அவர் எடுத்ததில் உதிரிப்பூக்கள் படம் நல்லாவே இல்லை என்று அவர் விமர்சித்து இருந்தார். அதற்கு இயக்குனர் அமீர் உட்பட பல திரை பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications