எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது! அனுமார் மீது கோபம் வரும்! "வாரணாசி" ராஜமவுலி பேச்சு
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம், இயக்குநர் ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு இணையும் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. க்ளோம் ட்ரோட்டர் என்ற தலைப்பில் நடந்த இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தான், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான ராஜமௌலி, தனது தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்திலும், மீடியா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ராஜமௌலி
இயக்குநர் ராஜமௌலி தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் முக்கியமான, வெற்றிகரமான இயக்குநர். 'பாகுபலி' ,RRR போன்ற பிரம்மாண்டப் படைப்புகள் மூலம் இந்திய சினிமாவின் எல்லைகளை உலக அளவில் விரிவுபடுத்தியவர். குறிப்பாக, RRR திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடலுக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றதன் மூலம் உலகப் புகழ் பெற்றவர். 'நான் ஈ', 'மகதீரா' போன்ற பல மெகா ஹிட் படங்களையும் கொடுத்தவர். இவரின் படங்கள் பலவும் புராண, கற்பனை மற்றும் வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டிருக்கும்.
ராஜமௌலியின் சர்ச்சை
ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாகப் பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவும், வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனும் நடிக்கிறார்கள். பிரித்விராஜ் கும்பா என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
பிரம்மாண்ட படைப்பு
இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோ பிஸ்னஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மூலம் படத்தின் தலைப்பு 'வாரணாசி' என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இயக்குநர் ராஜாமெளலி பேச்சு
படத்தின் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜமௌலி பேசிய கருத்துதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டர் வீடியோ மூலம் வெளியிடப்படவிருந்த நேரத்தில், சிறிது நேரம் தடைபட்டுப் போனது. இதனால் கோபமடைந்த ராஜமௌலி மேடையில் பேசுகையில், தனது தனிப்பட்ட நம்பிக்கைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: "எனக்குக் கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை. என் அப்பா அனுமன் நமக்குப்பின்னால் இருந்து பார்த்துக் கொள்வார் என்று சொன்னார். இப்படித்தான் பார்த்துக் கொள்வாரா? இதை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது."என்றார். விழாவில் ராஜமௌலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத், "இந்தப் படம் ஒரு தெய்வீக முடிவு. ராஜமவுலியின் இதயத்தில் இருந்து ஹனுமன் இப்படத்தை இயக்குவதற்கு வழி நடத்துகிறார்" என்று பேசியிருந்த சில நிமிடங்களிலேயே, ராஜமௌலி இப்படிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜமௌலி மேலும் கூறுகையில், "என் மனைவிக்கும் அனுமன் மேல் நிறைய அன்பு உண்டு. அவர் அனுமனைத் தனது நண்பனைப் போல நினைத்து அவருடன் பேசிக்கொண்டிருப்பார். இதையெல்லாம் நினைத்தால் மனைவி மீதும் எனக்குக் கோபம் உண்டு" என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
ராஜமௌலியின் இந்த பேச்சும் தனிப்பட்ட நம்பிக்கைகளை வெளிப்படையாகப் பகிர்ந்த விதமும் ரசிகர்கள் மற்றும் மீடியா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் அவரது வெளிப்படைத்தன்மையைப் பாராட்டியுள்ளனர்.
ராஜமௌலியின் பழைய சர்ச்சை
ராஜமௌலி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர், RRR பட விளம்பரத்தின் போது, தனது படங்களை மற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர்களுடன் ஒப்பிடுவது குறித்தும், இந்தியப் புராணக் கதைகளைப் பயன்படுத்துவது குறித்தும் இவர் பேசிய சில கருத்துகள் விவாதப் பொருளாகியிருந்தன.
'வாரணாசி'யின் பிரம்மாண்டம் ஒருபுறம் இருக்க, ராஜமௌலியின் இந்தத் தனிப்பட்ட கருத்துகள், இனிவரும் நாட்களில் சினிமா மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரிய பேசுபொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications