ஜெயிலர் 2 படத்துக்காக அனிருத் பட்ட கஷ்டம்.. எல்லாரும் பதற்றமாக இருந்தோம்! ரஜினிகாந்த் சொன்ன சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பெரிய படம் வெளியாகும்போது ஹீரோவின் நடிப்பு, இயக்குநரின் வேலை, படத்தின் கதை என்று பல விஷயங்களைப் பற்றித்தான் பேசுவோம். ஆனால், அந்தப் படத்துக்கு உயிர் கொடுக்கும் பின்னணி இசை அமைப்பாளருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்பதைப் பலரும் யோசிப்பதில்லை. குறிப்பாக, ரஜினிகாந்த் படம் என்றால் இசையிலும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், ஜெயிலர் 2 படத்துக்கு இசையமைத்த அனிருத் சந்தித்த நெருக்கடி குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிலும் அனிருத் இசை என்றாலே பாடல்கள் மட்டுமல்லாமல், ரஜினியின் இன்ரோடக்சன் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் பின்னணி இசை எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் இருக்கும்.

ரஜினிகாந்த் பேச்சு

இந்த நிலையில், ஜெயிலர் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், அனிருத் இந்தப படத்துக்காக எப்படியெல்லாம் வேலை பார்த்தார் என்பதைப் பகிர்ந்திருக்கிறார். அனிருத் ஏற்கெனவே வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்த ஒப்புக்கொண்டிருந்தாராம். அதே நேரத்தில், அவர் இசையமைத்த 'தி பாரடைஸ்' படமும் திட்டமிட்டதைவிட முன்னதாக வெளியாவதாக இருந்ததால், அந்த படத்துக்கான பணிகளையும் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Rajinikanth Anirudh Jailer

அனிருத் பற்றி நெகிழ்ச்சி

இதுபற்றி ரஜினிகாந்த் பேசும்போது, எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் வரிசையில் அடுத்தது அனிருத் தான். 'ஜெயிலர் 2' படத்துல அனிருத்துக்குத்தான் பெரிய பிரஷர் இருந்தது. ஏற்கெனவே வெளிநாடுகளில் அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கு ஒத்துக்கிட்டிருந்தார். 'தி பாரடைஸ்' படமும் முன்னாடியே ரிலீஸ் ஆகுற சூழல் வந்தது. அந்த இசை நிகழ்ச்சிகளையும், தி பாரடைஸ் பட வேலையையும் முடிச்சுட்டு, அதுக்குப் பிறகுதான் ஜெயிலர் 2 படத்துக்கு பின்னணி இசை அமைக்க வந்தார் என்று தெரிவித்திருக்கிறார்.

அனிருத்துக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகள் இருந்தாலும், ஜெயிலர் 2 படத்தின் இசைப் பணிகளையும் முடிக்க வேண்டியிருந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் அனைவரும் பதற்றத்தில் இருந்தோம் என ரஜினி கூறியிருக்கிறார். ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கும்போது மியூசிக் பணிகள் தாமதமானால், அடுத்தடுத்த வேலைகளிலும் பாதிப்பு ஏற்படும். அந்தச் சூழலில்தான் அனிருத் வேலை பார்த்திருக்கிறார் என்பதை ரஜினியின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

Rajinikanth Anirudh Jailer

பாராட்டிய ரஜினி

இந்த பிரஷருக்கு மத்தியிலும் அனிருத் 'ஜெயிலர் 2' படத்துக்கு அருமையான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்திருப்பதாக ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். ரஜினி படங்களில் இசைக்கு இருக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, 'ஜெயிலர்' படத்தில் அனிருத் அமைத்த இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்திலும் அவர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+