வெடியை போடு! 40 வருஷத்துக்கு பிறகு மீண்டும் இணையும் கமல்- ரஜினி! இவங்களை இயக்க போவது அந்த பிரபலம் தானாம்!
சென்னை: தமிழ் சினிமாவில் இரண்டு பெரும் ஆளுமைகளாக இருந்துவரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் நான் சில நடிகர்களின் ரசிகர்களின் சண்டை, அந்த காலம் முதல் இந்த காலம் வருகிறது. அந்த காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அதிகமாக மோதிக் கொள்வார்கள். அதற்குப் பிறகு ரஜினி, கமலுடைய ரசிகர்களும் மோதி வந்தனர். இப்போது அஜித், விஜய் உடைய ரசிகர்கள் அதே போட்டி போல போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோருமே நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இதை பல மேடைகளில் அவர்கள் சொல்லிக் கொண்டு இருந்தாலும் ரசிகர்களின் அக்கப்போருக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
ரஜினி கமல் பயணம்
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது கே.பாலச்சந்தர் தான். அவர் இவர்களை வைத்து 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை இயக்கி அறிமுகப்படுத்தினார். ரஜினியும் கமலும் ஆரம்ப காலகட்டத்தில் '16 வயதினிலே', 'மூன்று முடிச்சு', 'அவள் அப்படித்தான்', 'தாய் இல்லாமல் நான் இல்லை' உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
40 ஆண்டுகால இடைவெளி
ஆனால், கடந்த 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து நடிக்கக்கூடாது என முடிவெடுத்தனர் என்று கூறப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்து வந்தனர்.
ரசிகர்களின் மோதல்
ரஜினி மற்றும் கமல் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியானபோது பாக்ஸ் ஆபிஸில் மோதும். ஒருமுறை ரஜினி நடித்த 'படிக்காதவன்' மற்றும் கமல் நடித்த 'காக்கி சட்டை' ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீசானது. ரசிகர்கள் இருவரும் தங்கள் தலைவரின் படத்தை வெற்றிபெறச் செய்ய பெரும் முயற்சி எடுத்தனர். ரஜினி - கமல் இருவரும் பிரிந்து நடித்தாலும் அவர்களுடைய ரசிகர்களுக்குள் தொடர்ந்து மோதல்கள் இருந்து வந்தன. இன்றும் சமூக வலைதளங்களில் யார் சிறந்தவர் என சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 'கூலி'யால் ஏற்பட்ட விமர்சனங்களை போக்க இந்த ரஜினி - கமல் கூட்டணி அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கூலி' படத்திற்குப் பிறகு 'கைதி 2' படத்தைத்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ரஜினி - கமல் கூட்டணியை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமலுக்கு கம்பேக்
கமல்ஹாசனும் 'தக் லைஃப்' தோல்வியால் பின்னடைவை சந்தித்துள்ளார். அவருக்கும் இது கம்பேக் படமாக அமைய வாய்ப்பு உள்ளது. இந்த மாபெரும் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications