கமல்- ரஜினி நடிக்கும் திரைப்படம்! யார் வில்லன்? யாரு ஹீரோ? வெளியான அப்டேட்! சம்பவம் பெருசு தான்
சென்னை: தமிழ் சினிமாவில் இரண்டு பெரும் ஆளுமைகளாக இருந்துவரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட கூட்டணி
ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கனவு. இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஆர்வமும் இருவருக்கும் இருந்தது. ஆனால் சரியான கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அமையாததால் அது நடக்கவில்லை. பலமுறை ரஜினியும் கமலும் பேட்டிகளில் "பேசி வருகிறோம்... கண்டிப்பாக செய்வோம்" என சொல்லி வந்தனர்.
லோகேஷின் நம்பிக்கை
லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படம் மூலம் கமலை வெற்றிப்பாதையில் மீண்டும் கொண்டு வந்தார். அதேபோல் சமீபத்தில் வெளியான 'கூலி' படத்தின் மூலம் ரஜினியின் வசூல் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் வெற்றியும், லோகேஷ் மீது ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மல்டி ஸ்டார்களை வைத்து தன்னால் வெற்றிப்படம் கொடுக்க முடியும் என்பதை லோகேஷ் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.
அமீர் கான் குழப்பம்
'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, "லோகேஷ் என்னிடம் ஒரு கேமியோ வேடத்தில் ஒரு நடிகர் நடிக்கவிருக்கிறார். நீங்கள் நம்ப மாட்டீர்கள்" என சொன்ன போது, 'உலக நாயகனை சம்மதிக்க வைத்துவிட்டாரா' என நினைத்தேன். ஆனால் அது அமீர்கான் என லோகேஷ் சொன்னார்" என்று கூறியிருந்தார்.
படத்தின் கதை
'கூலி' படத்திற்கு முன்பு, லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் ஒரு கதை சொன்னார். முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அவர் சொன்ன அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தது. "வில்லன் கதாபாத்திரத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று ரஜினி அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். இப்போது இந்த ரஜினி - கமல் படத்தில், கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் நிபந்தனை
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய கமல், ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படம் குறித்து, "இதை ரஜினியும் என்னிடம் கேட்டார். 'நீங்களும் நானும் இணைந்தால் அந்த படத்தை நான் தயாரிக்கிறேன் இல்லை நீங்கள் தயாரியுங்கள். இடையில் வேறு ஒருவர் வரக்கூடாது' என சொன்னேன்" என்று கூறினார். இந்த படத்தின் தயாரிப்புப் பொறுப்பை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிடல்
இந்தப் படம் சுமார் ₹700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என சொல்லப்படுகிறது. 'கூலி' படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரஜினி-கமல் இணையும் படத்தை முதலில் இயக்க இருப்பதால், 'கைதி 2' தள்ளிப்போகும் என்கிறார்கள். ரஜினி-கமல் படத்தின் படப்பிடிப்பு 2026 பாதியில் துவங்கும் என கூறப்படுகிறது.
புதிய CEO
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக உதயநிதியின் மகன் இன்பநிதியை நியமிக்கப் போகிறார்களாம். அந்த அறிவிப்போடு ரஜினி-கமல் இணையும் படத்தின் அறிவிப்பையும் வெளியிடுவார்கள் என சொல்லப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications