அண்ணாந்து பார்க்க வைத்த "சாமிகள்".. பொண்ணு, சரக்கு, பீர், கிசுகிசு! இளையராஜாவை சீண்டும் ரஜினிகாந்த்?
சென்னை: இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், ரஜினிகாந்த் பேசும்போது, ஜானி படத்தின் ரெக்கார்டிங்கின் போது, இளையராஜா அரை பாட்டில் பீர் அடித்து ஆட்டம் போட்டது, நடிகையர் குறித்த கிசுகிசுக்களை கேட்டது பற்றி கலகலப்பாக கூறியிருந்தார்.. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.. வயது முதிர்ந்த ரஜினிகாந்த், அரசு விழாவில் இப்படியான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். இந்நிலையில், பத்திரிகையாளர் பாலு தன்னுடைய கருத்தக்களை தெரிவித்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "ரஜினி ஒளிவுமறைவு இல்லாமல் பேசக்கூடியவர்.. ஆனால், இளையராஜா மேடையில் இப்போது ரஜினி பேச வேண்டுமா?

நடிகைகள் பற்றி கிசுகிசுவெல்லாம் சொல்லுங்க என்று ரஜினியிடம் அன்று இளையராஜா கேட்டாராம்.. இதை ரஜினி சொன்னதுதான் பலருக்கும் அதிர்ச்சியை தந்துவிட்டது..
இளையராஜாவை சீண்டினாரா ரஜினி
ஒருகாலத்தில் ரஜினிகாந்த்தின் ஐகானே சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பதும், மது குடிப்பதும்தான்.. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி ரஜினிக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் சிகிச்சைக்கு சிங்கப்பூர் சென்றுவந்தபிறகு, பல மேடைகளில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஊட்டி வருகிறார் ரஜினி..
"தயவுசெய்து, மது, சிகரெட்டை தொட வேண்டாம்.. இவைகளை தொட்டபிறகுதான் அந்த ஆபத்து எனக்கு தெரிகிறது" என்று தன்னுடைய வேதனைகளை சொல்லி வருகிறார்..
லட்சுமி கொட்டுது சாமி
தமிழக அரசு கோடி ரூபாய் செலவு செய்தாலும், இப்படியொரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய முடியாது.. ஆனால் இதை ரஜினி ஒவ்வொரு மேடையிலும் செய்து வருகிறார்.. அப்படியிருக்கும்போது, இளையராஜா பற்றி பீர் விவகாரத்தை சொல்லியிருக்கக் கூடாது. இதற்கு இதுவரை இளையராஜா எந்தவித மறுப்பும், கருத்தும் சொல்லாமல் உள்ளார்..
ஆனால், எப்போதுமே இளையராஜாவை இப்படி சீண்டி பார்ப்பது ரஜினியின் விருப்பம் என்று சிலர் சொல்கிறார்கள்.. "உங்களுக்கென்ன சாமி, பணம் கொட்டோ கொட்டுனு லட்சுமி கொட்டிட்டே இருக்குது.. யாராவது எங்கேயோ பாட்டு கேட்டால், இங்கே உங்க அக்கவுண்ட்டில் பணம் விழுது என்று நேரடியாகவே சொல்லக்கூடியவர். அப்படித்தான் இப்போதும் இளையராஜாவை கடுப்பில் பேசியிருக்கிறார் ரஜினி என்கிறார்கள் ஒருசாரார்.
சாமி சாமி - சரக்கு, பொண்ணு, பீர்
இவர்கள் 2 பேரும் சாமி சாமி என்று சொல்லிக்கொள்வர்கள்.. கடவுள் மீது பற்று கொண்டவர்கள்.. ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.. யோகா, தியானத்தை செய்து கொண்டிருப்பவர்கள்.. இப்போது மேடையில் சரக்கு, பொண்ணு, பீர், கிசுகிசு என்றெல்லாம் பேசிவிட்டு போயிருக்கிறார்கள்.
ஆனால் கடவுள் மறுப்புள்ள கமல்ஹாசன், நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்க மாட்டேன் என்று கூறும் கமல்ஹாசன், அடுத்தவர்களை என் காலில் விழ சொல்ல மாட்டேன் நானும் யார் காலிலும் விழமாட்டேன் என்று கூறும் கமல்ஹாசன், அந்த மேடையில் ஒரேயொரு சின்ன பாட்டு பாடி முடித்துவிட்டு போய்விட்டார்.
சொந்த அனுபவம்கூட வேண்டாம்
ஒருவேளை ரஜினிகாந்த், இளையராஜா இருவரும், இன்றைய இளைஞர்களை கண்டு உற்சாகமாகிவிட்டு, அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு வந்துவிட்டோம் என்பதை காட்டுவதற்காகவே இப்படி பழைய கதைகளை பேசினார்களா? தெரியவில்லை. ஆனால் அது பொருந்தவில்லை..
இனிவரும் காலங்களிலாவது கமல்ஹாசன் ரஜினிகாந்த், இளையராஜா யாராக இருந்தாலும், இவர்கள் அனைவருமே உச்சத்தை தொட்டவர்கள்.. இனி மேடைகளில் பேசும்போது, தீய பழக்கத்திற்கு எதிராக பேசவேண்டும்.. சொந்த அனுபவத்தில் நடந்திருந்தாலும்சரி, தீயவையாக இருந்தால் அதை மேடைகளில் கொண்டுவரக்கூடாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications