ரஜினிகாந்த் அந்த படத்தில் என்னோடு நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை ரம்பா
சென்னை: நடிகை ரம்பா தன்னோடு ரஜினிகாந்த் நடிக்க மறுத்த காரணத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
நடிகை ரம்பா நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் ரம்பாவோடு தான் நடிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டாராம்.
ஆனால் அதற்கு என்ன காரணம் என்ன என்பது பற்றி ரம்பா முதல் முறை மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை ரம்பாவுக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். நடிகர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ரம்பா ரஜினி, கமல்ஹாசன் போன்றவரோடும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு அருணாச்சலம் திரைப்படத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து இப்போது பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் நான் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இயக்குனர் சுந்தர் சி என்னிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொன்னார். அது என்னன்னா நீங்க அடுத்ததாக ரஜினி சார் நடிக்கும் படத்துல தான் நடிக்க போறீங்கன்னு சொன்னார்.
அத கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம் கொஞ்ச நாளிலேயே ரஜினி சாரோட நடிக்கும் படத்திற்கான சூட்டிங் தொடங்கிவிட்டது. அது என்ன படம்னா அருணாச்சலம் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நானும் சௌந்தர்யாவும் அவ்வளவு நெருக்கமா இருப்போம். சௌந்தர்யா பார்ப்பதற்கு தான் அமைதியா இருப்பாங்க ஆனால் எப்போதும் என்னோடு ஜாலியாக துருதுருனு இருப்பாங்க.
ரெண்டு பேரும் நாங்க செட்டில் ரொம்பவே ஜாலியா இருப்போம். எந்த இடத்தில் இருந்தாலும் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம். ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் எல்லோரும் எங்களை பார்த்து கிண்டல் செய்வார்கள். அப்போது ரஜினி சார் கூட சொல்லுவாரு சௌந்தர்யா பார்க்க இன்டெலிஜென்ட் மாதிரி இருக்கும் ஆனா வெகுளி,

ஆனால் இந்த ரம்பா வெகுளி மாதிரி இருக்கும் ஆனா ரொம்ப இன்டெலிஜென்ட் ஆன பொண்ணு என்று என்னை பார்த்து சொல்லுவாரு. ஆனால் அப்படியெல்லாம் பேசினவர் தான் ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் என்னை அழ வச்சுட்டாரு. அது என்னன்னா நாங்க ஒரு நாள் எல்லோரும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தோம். அந்த நேரத்தில் நான் அருணாச்சலம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சல்மான் கானோடு இன்னொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போ ஹைதராபாத்தில் அருணாச்சலம் திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சல்மான் கான் வந்திருந்தார். நான் அப்போ ஏற்கனவே சல்மான் கானோடு இரண்டு மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் அவரைப் பார்த்ததும் ஓடி சென்று கட்டிப்பிடித்து வணக்கம் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்து விட்டேன். ஆனால் இதை எல்லாம் ரஜினி சார் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
பிறகு நான் வந்ததும் அங்கு இருந்தவர்களிடம் கோபமாக பேசிக்கொண்டே இருந்தார். கையில் வைத்திருந்த ஒரு துண்டை தூக்கி கீழே போட்டுவிட்டு எல்லாரிடமும் கோபமாக பேசுகிறார். அங்கிருந்த சுந்தர் சி உட்பட எல்லோரும் என்னையே திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள். என்னையும் பார்க்கிறார்கள், ரஜினி சாரையும் பார்க்கிறார்கள்... எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
ஏதோ தப்பா நடக்கிறது மட்டும் புரிஞ்சுச்சு. ஆனா என்ன பிரச்சனைங்கிறது புரியாமல் நான் முழித்துக் கொண்டிருந்தேன். அப்போ சுந்தர் சி சார் என்கிட்ட வந்து என்ன ரம்பா இப்படி பண்ணிட்டீங்கன்னு கேட்டாரு எனக்கு என்னன்னு தெரியலையே சார் என்ன ஆச்சுன்னு நான் கேட்டேன். நீங்களே ரஜினி சார் கிட்ட பேசுங்கன்னு சொன்னாரு. நான் அவர்கிட்ட பேசுறதுக்கு முன்னவே எனக்கு அழுக வந்துடுச்சு.
நான் அழுதுட்டு இருந்தேன் அப்போ ரஜினி சார் வந்து என்னாச்சு ஏன்டா குழந்தையை அழவெச்சிங்கன்னு கேட்டாரு. அப்புறம் தான் நான் கொஞ்சம் சமாதானம் ஆனேன். அதற்கு பிறகு எதுக்காக அவர் கோவப்பட்டார் என்பதை நடித்து காட்டினார். அங்கிருந்த ரெண்டு மூணு பேர நிக்க வச்சுட்டு இதுவரைக்கும் ரம்பா நம்மகிட்ட வணக்கம் எப்படி சொல்லுவாங்கன்னு கேட்டாரு, எல்லோரும் நான் எப்படி செட்டுக்குள்ள வந்ததும் அமைதியா வணக்கம் சொல்லுவேனோ அதையே செஞ்சு காட்டுனாங்க.
அதற்கு ரஜினிகாந்த் ஆனால் இன்னைக்கு சல்மான் கான் வந்ததும் ஓடிப்போய் கட்டி பிடிச்சு வணக்கம் சொன்ன மாதிரியே செஞ்சு காட்டுனாரு. பிறகு நாங்க தென்னிந்திய நடிகர்கள் என்பதால் எங்களுக்கு ஓரவஞ்சனை காட்டுறீங்களா? நீங்க உங்க நார்த்து பீப்பிள் வந்தா அவங்க கிட்ட வித்தியாசமா நடந்துப்பீங்களான்னு அப்படியே நடிச்சு காட்டினார்.

நான் ஒரு நிமிஷம் அப்படியே மிரண்டு போயிட்டேன். உண்மையிலே சொல்றேன் இது பெரிய அளவில் சண்டையா வரல. ஆனா ரஜினி சார் இப்படி எல்லாம் பண்ணுவார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல. பிறகு சூட்டிங் எப்போதும் போல நடந்துச்சு என்று அந்த பேட்டியில் ரம்பா பேசியிருக்கிறார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications