'கூலி' படத்திற்கு ரஜினிகாந்த் சம்பளம் இத்தனை கோடியா? கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்! ரிலீசுக்கு முன்பே குழப்பம்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் பட்ஜெட், நடிகர் தேர்வு மற்றும் பாக்ஸ் ஆபிஸ் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், 'கூலி' படத்திற்கு ரஜினிகாந்த் கூடுதலாகச் சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் சம்பளம்
'கூலி' படத்திற்கு ரஜினிகாந்த் தனக்குச் சம்பளம் பத்தாது என்றும், கூடுதலாக இத்தனை கோடி வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'கூலி' திரைப்படம், ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
ரஜினியின் ரோல்
'கூலி' டீசரை வைத்துப் பார்த்தால், இதில் ரஜினிகாந்தும், சத்யராஜும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜின் மகள் தான் ஸ்ருதி ஹாசன். சத்யராஜுக்கு ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அவரை காப்பாற்றவோ, அல்லது அவரது மகளுக்காகவோ ரஜினிகாந்த் மீண்டும் களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்று தெரிகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
கூலி படத்திற்கு ரூ. 1000 கோடி வசூல்
'மாநகரம்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான லோகேஷ், 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமீர் கான் (சிறப்பு தோற்றம்), ஷோபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர்.
'A' சான்றிதழ்
'கூலி' படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 'A' சான்றிதழ் பெற்ற படங்கள் குடும்ப ரசிகர்களைக் கவர்வது கடினம். இதனால், வசூலில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், லோகேஷின் 'விக்ரம்' மற்றும் 'லியோ' ஆகிய படங்களும் அதிரடி ஆக்ஷன் படங்கள் என்பதால், இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷின் கருத்து: "ரூ. 1000 கோடி வசூல் குறித்து நான் உறுதியளிக்க முடியாது, ஆனால் டிக்கெட்டுக்கு நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நிச்சயம் மதிப்பு இருக்கும் என உறுதியளிக்க முடியும்," என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
'கூலி' படத்தின் பிரம்மாண்டமான நடிகர்கள், இயக்குனரின் பெயர், மற்றும் உலகளாவிய எதிர்பார்ப்பு ஆகியவை ரூ. 1000 கோடி வசூல் செய்யும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இருப்பினும், படத்தின் விமர்சனங்களும், 'வார் 2' உடனான போட்டியும் இதன் வெற்றியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications