கோவை இன்டிகோ விமானத்தில் ஏறிய ரஜினிகாந்த்! ஓ மை காட்! தலைவா! திக்குமுக்காடிய "ஜெயிலர்"
சென்னை: கோவையிலிருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் ரஜினிகாந்த் பயணிக்க வந்த போது விமானத்தில் இருந்த மக்கள் ஓ மை காட், தலைவா, தலைவா என அழைத்து ஆரவாரம் செய்தனர். அதற்கு ரஜினியும் அவர்களை கை கூப்பி வணங்கினார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கு படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் அவர் நேற்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்த போது பூசாரி ஒருவர் வழிமறித்து தலைவா வாங்க ஒரு சிறிய கற்பூர தீபாராதனை என்றார்.
உடனே ரஜினியும் காரை விட்டு இறங்கி கற்பூர தீபாராதனையில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் நேற்று இரவு கோவையில் உள்ள விமான நிலையம் சென்றார். அங்கு இன்டிகோ விமானத்தில் சென்னை நோக்கி புறப்பட இருந்தார்.
பிசினஸ் கிளாஸ்
அதற்காக விமானத்தில் அவர் பிசினஸ் வகுப்பில் ஏறினார். முன்னதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்தார். அவர் வந்ததுமே யாரோ விஐபி வருகிறார்கள் என்பதை பயணிகள் உணர்ந்தனர். உடனே வேகமான நடையில் கருப்பு நிற டீசர்ட் அணிந்து கொண்டு ரஜினிகாந்த் வந்திருந்தார்.
ஆரவாரம்
அவரை பார்த்ததும் பயணிகள் ஆரவாரம் செய்தனர். தலைவா தலைவா என்றும் ஆரவாரம் செய்தனர். மேலும் ஓ மை காட் என பெண் ஒருவர் பிரமிப்பாக சொன்னார், ரஜினிகாந்த் சிரித்தபடிய எல்லாரையும் வணங்கிவிட்டு அமர்ந்தார்.
தலைவா
அவர் அமர முயன்ற போதும் பலர் தலைவா தலைவா என அழைத்தனர். ரஜினியும் உட்காராமல் அவர்களை பார்த்து சிரித்தார். இப்படி ஆரவாரம் அடங்குவதற்கே சற்று நேரம் ஆனது.
ரஜினிகாந்த்
அட்டப்பாடி சென்ற போது கூட நிறைய ரசிகர்கள் சூழ்ந்திருந்ததை பார்த்த ரஜினி, காரின் மேல் விண்டோவை திறந்து நின்றார். அப்போது எல்லாரையும் பார்த்து வணங்கினார். அது போல் அவர் தங்கியிருந்த ரிசார்ட் நோக்கிக் கூட சிலர் படையெடுத்ததாக தெரிகிறது. சில சமயம் தன் வீடு தேடி யாராவது வந்துவிட்டால் கூட அவர்களை வரவேற்று புத்திமதி சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் அனுப்பி வைப்பாராம்.
மதிப்பது வழக்கம்
பொது இடங்களில் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு எப்போதுமே மதிப்பு கொடுப்பது வழக்கம். எவ்வளவு தூரத்தில் இருந்தோ நம்மை பார்க்க வந்திருக்கிறார்கள் என்பதால் ரஜினி கையசைப்பது, முகத்தை காட்டுவது போன்ற செயல்களை செய்வார்.
செல்பி
அது போல் விமான நிலையங்களில் கூட யாராவது அழைத்தால் பார்த்து சிரிப்பார். செல்பி கேட்டாலும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெயிலர் 2
அப்போது அவர் கூறுகையில் ஜெயிலர் 2 திரைப்படம் ஷூட்டிங் நன்றாக போய் கொண்டிருக்கிறது. இன்னும் பாக்கி ஷூட்டிங் இருக்கிறது என்றார். மேலும் அவரிடம் காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
காஷ்மீர் தாக்குதல்
அதற்கு அவர் காஷ்மீர் அமைதியான முறையில் இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை. அதை சீர்குலைக்க நினைக்கிறார்கள். அவர்கள் யார் என கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும். இனி கனவில் கூட அது போன்ற செயல்களை அவர்கள் செய்யாத வண்ணம் அந்த தண்டனையை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்திருந்தார். அரசியல் கேள்வியை தவிர, சர்ச்சையில்லாத எந்த கேள்விக்கும் ரஜினி பதில் சொல்வது வழக்கம்.!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications