அரசியல் பேசிய ராஜு...பயந்துபோன தாமரை...கண்டுபிடித்த ரசிகர்கள்
சென்னை: இலைமறைகாயாக அரசியல் பேசிய ராஜுவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே கமல் ஒரு பக்கம் அரசியல் பேசிக்கொண்டிருக்கும்போது தற்போது ராஜூவும்தொடங்கிவிட்டார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நிமிடம் தாமரை தன்னைத்தான் சொல்கிறாரோ என்று திகைத்துப் போய்விட்டார்.

மிமிக்கிரியில் அசத்திவிட்டார்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ராஜு, செய்யும் செயல்கள் எல்லாமே வைரலாக பரவி வருகிறது. நேற்றைய எபிசோட்டில் கலகலப்புக்கு இவரும் ஒரு காரணம். ஜாலியாக சக போட்டியாளர்கள் அனைவரையும் அமர வைத்து தன்னுடைய வாயாலே வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். இவர் பேசிய மிமிக்கிரியை பார்த்து பலர் விழுந்து விழுந்து சிரித்து இருக்கின்றனர். அடிக்கடி சண்டையையும், பொறாமையையும் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோடு என்டர்டைன்மெனட் கொடுத்திருக்கிறது.

தனித்துவமான கேரக்டர்
சின்னத்திரை கதாநாயகனாக பலருக்கும் பரிச்சயமான ராஜு தற்போது வெள்ளித்திரை கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுவிட்டார். இந்த சீசனில் முதல் நாளிலிருந்து இவருடைய விளையாட்டு வேறுவிதமாக இருந்துவருகிறது. யாரிடமும் சென்று சண்டை போடவோ, யாருக்கும் பின்னாடி பேசவோ இல்லாமல் இருப்பதால் இவர் தனித்துவமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு எக்ஸ்பிரஷனும் முகத்தில் காட்டாமல் அடிக்கடி போட்டியாளர்களை சிரிக்க வைத்தும் கொண்டு வருகிறார். தன்னுடைய திறமையை போட்டியாளர்களிடம் மட்டுமல்லாமல் ரசிகர்கள் இடமும் நன்றாகவே காட்டிவிட்டார்.

முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை
இவர் எந்த ஒரு சம்பவத்திலும் நேரடியாக கலந்து கொள்ளாமல் தனியாக இருப்பது இவருடைய ஒரு குறையாக இருந்தாலும், இதுவே இவருக்கு நிறையாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் வழவழ என பேசிக்கொண்டு தங்களுடைய நன்மதிப்பை கெடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இவர் பேச வேண்டிய நேரத்தில் அழுத்தமாக தன்னுடைய கருத்தை மட்டும் கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் அடுத்தவர்களின் செயல்களை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் இவரைப் பிடித்து விட்டது. அதுமட்டுமல்லாமல் இவரிடம் அபிஷேக்கின் எந்த ஒரு பாச்சாவும் பலிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆக இருந்து வருகிறது.

இங்கேயும் அரசியலா??
நேற்றைய எபிசோட்டில் ராஜு தன்னுடைய மிமிக்கிரி செய்து கொண்டிருந்தார். அதில் மைக் செட்டு முதல் வண்டிகளின் சத்தம் வரைக்கும் பலவிதமான டாப்பிக் போய்க் கொண்டிருந்தது. அது அதுமட்டுமல்லாமல் சூர்யா போன்றும் ரஜினி போன்றும் இவர் பேசிக் கொண்டிருக்கும் போது சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அசந்து போய் விட்டார்கள். அடடா என்ன ஒரு திறமை என்று, ஆனால் இவர் அப்படி கலாய்த்துக் கொண்டு இருக்கும்போது தாமரையை கலாய்ப்பது போல அரசியலும் பேசியிருக்கிறார். அதில் தாமரையை பார்த்தால் தான் பயமாக இருக்கிறது என்று இவர் கூறியதற்கு தாமரை நிஜமாவா!!?? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இங்க ஒரு தாமரை இருக்கிறதோ...ஆமா உன்னை பார்த்தாலும் தான் என்று இவர் கூறியது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications