கத்தரி பூவழகி கரையான் பொட்டழகி.. கலரு சுவையாட்டம் உன் நினைப்பு.. உருகும் ரசிகர்கள்!
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் தேவி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்ட ரக்ஷா ஹொள்ளா தற்போது நடத்தி இருக்கும் போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
எப்பவுமே அவரை புகழ்ந்து தள்ளும் ரசிகர்களுக்கு தற்போது அவருடைய போட்டோஷூட் கவிதைகளை பொழியச் செய்யும் கவிஞர்களாக மாற்றி இருக்கிறதாம். இவர் பெங்களூர் காரர். சின்னத்திரையின் கன்னடத்துப் பைங்கிளி.
கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். இவரது ஆசை நடிகையாக வேண்டும் என்பதுதான். அதனால் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங்கில் களமிறங்கி முன்னோட்டம் பார்த்துள்ளார்.

சீரியல் பிடிச்சிருக்கு
மாடலிங்கில் கிடைத்த பிரபலம் மூலமாக இவருக்கு கன்னட மொழியில் சின்னத்திரைகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர். அதன் பிறகு கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு படங்களை விடவும் சீரியல்களில் நடிப்பதுதான் ரொம்பவும் பிடித்ததாக இருந்தது.

கன்னடத்து கிளியின் தமிழாசை
தமிழில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய ஆசையாக இருந்தது. இந்த நிலையில்தான் ஒரு வரப்பிரசாதம் போல சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் இவருக்கு அமைந்தது. வம்சம் சீரியலில் அறிமுகமான பிறகு இவருக்கு விஜய் டிவியில் தமிழ் கடவுள் முருகன் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அந்த சீரியலில் அஜமுகி எனும் கேரக்டரில் இவர் நடித்து இருக்கிறார்.

காதல் மலர்ந்து கல்யாணம்
சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது ராகேஷ் ஷர்மா என்பவரின் நட்பு கிடைத்தது .அவர்களின் நட்பு பின்பு காதலாக மாறியிருக்கிறது. 8 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் நடிப்பதை தொடர்ந்தார். அதன் பிறகுதான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . இந்த சீரியல்தான் ரக்ஷாவுக்கு பெரும் திருப்புமுனை.

அதகளம் செய்த தேவி
இந்த சீரியல் தேவி கேரக்டரில் ரக்ஷா ரசிகர்கள் மனதில் பசை போல ஒட்டி விட்டார். இது மாயன் தேவி கேரக்டர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் கேரக்டராகவே அமைந்திருந்தது. இவர்களுக்குள் இருக்கும் காதல் சின்ன சின்ன சண்டை அனைவருமே ரசிக்கும் அளவில் இருந்தது. அதில் இவருடைய நடிப்பை பார்த்து பல ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். ஆனால் லாக்டோன் காரணமாக இந்த சீரியலை திடீரென்று முடித்துவிட்டனர்.

வேதனைக்குள்ளான ரக்ஷா
இதனால் ரக்ஷா மிகவும் வேதனை அடைந்தார். ஏனென்றால் இந்த சீரியலில் நடித்தவர்கள் அனைவருமே ஒரு குடும்பம் போல ஒன்றாகவே பழகி வந்திருக்கிறார்கள். திடீரென்று இதை முடிக்கும் போது அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் தற்போது இந்த சீரியல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதில் ரக்ஷாவை காணாத இவருடைய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து போனார்கள். ஆனாலும் ரட்சிதா வந்து அந்த இடத்தை நிரப்பி விட்டார்.

போட்டோ போட்டு குஷி
ரசிகர்களுக்கு குஷி ஏற்படுத்தும் வகையில், ரக்ஷா இன்ஸ்டாகிராமில் அப்பப்ப போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். தற்போது ரக்ஷா ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் அந்த போட்டோ ஷூட்டில் தேவதை போன்று அழகாக இருக்கிறார். இவரை பார்த்த ரக்ஷா ரசிகர்கள் இவரை ஏகத்துக்கும் வர்ணிக்கிறார்கள் . பலர் கவிதை மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். சீரியல்களில் இவரை காணாது தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது.

ரசிகர்கள் ஹேப்பி
சில நேரங்களில் ரக்ஷா இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் லைவில் வந்து பேசுவதால் ரசிகர்களுக்கு என்ஜாய்மென்ட் ஆக இருக்கிறதாம். தற்போது ரக்ஷா நடத்தியிருக்கும் போட்டோஷுட்டில் கலர்ஸ் நேச்சர் மற்றும் வரவுகளில் புன்னகை என்று தலைப்பு போட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் ரக்ஷாவை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

காத்திருக்கும் ரசிகர்கள்
சிலர் சீக்கிரமாக உங்களை சின்னத்திரையில் எதிர்பார்க்கிறோம். விரைவில் வந்து விடுங்கள் எங்களை ரொம்ப நாட்கள் காக்க வைக்காதீர்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். சிலரோ லட்டு பேபி இவ்வளவு அழகாக நாங்க யாரையும் பார்த்தது இல்லை உங்கள் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது அவ்ளோ அழகு . திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க என்றெல்லாம் உருகி வருகிறார்கள். சரி சரி அடக்கம் ஒடுக்கமாக ஜொள்ளு விடுங்கப்பா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications