வேட்டியை ஏத்தி கட்டி.. உதட்டுல விரலை வச்சு.. உசுப்பேத்தறீங்களே ரக்ஷா!
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருந்த ரக்ஷா ஹொள்ளா, தற்போது வேட்டியை மடித்துக் கட்டி மாயன் கெட்டப்பில் பக்கா மாஸ் காட்டியிருக்கிறார்.
இந்த போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தேவியாக நடித்து ரசிகர்களின் மனதில் குடிகொண்டிருந்தவர் ரக்ஷா.
திடீரென்று அந்த சீரியலை நிறுத்தியதும் அதன்பிறகு போட்டோஷூட்டில் இறங்கிவிட்டார். அவரை தினமும் திரையில் பார்த்து வந்த அவரது ரசிகர்கள் மீண்டும் இந்த நாம் இருவர்நமக்கு இருவர் சீசன் 2வில் அவரை காணாது ரொம்பவே தவித்து வருகின்றார்கள்.

வாங்க தேவி வாங்க
இவர் ஒரு போஸ்ட் போட்டதும் தேவி நீங்க எப்போ மறுபடியும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வருவீர்கள் என்று தான் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த சீரியலை முடித்து தற்போது இரண்டாம் பாகம் அதே கதையை மாதிரி தான் கொஞ்சம் உட்டாலங்கடி போய்க் கொண்டு இருந்தாலும் பலரும் முதல் பாகத்தில் நடித்த தேவியை தான் தேடி வருகிறார்கள்.

தேவியை மட்டும்
இரண்டாவது சீசனிலும் முதல் சீசனில் நடித்த கதாநாயகனாக அதே செந்தில் தான் இதிலும் அதே மாயம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த சீரியலின் மையமாக இருந்த தேவியை தூக்கி விட்டார்கள் அதற்கு பதிலாக நட்சத்திராவை மகா கேரக்டரில் வைத்திருந்தாலும் முதல் சீசன் போல தான் இதுலயும் முட்டல் மோதல் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிறகு காதல்
முதல் சீசனிலும் தேவி முதலில் முட்டிக்கொண்டு இருந்தாலும் பின்புதான் நேசிக்கத் தொடங்கினார்கள் அந்த மாதிரி தான் இப்போதும் மாயனும் மகாவும் இழுபறி கேசாக தான் இழுத்துக்கிட்டு இருக்காங்க. இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சூடு பிடித்து இருந்தாலும் அவர்களின் கவலை எல்லாமே தேவியாக நடித்துக்கொண்டிருந்த இவரை காண வில்லை என்பதுதான்.

ஏக்கம் தீர்த்த ரக்ஷா
ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் .அதுவும் அவருக்கு பிடித்த அதே மாயன் கேரக்டரின் கெட்டப்பை போட்டு தற்போது அசத்தியிருக்கிறார். பச்சை கலர் சொக்கா போட்டு அதற்கு மேட்சாக வேட்டியை மடித்துக் கட்டி கலக்கலாக இவர் போஸ் கொடுத்திருக்கும் போது பார்த்து அதுவும் முகத்தில் பார்வை வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.

ரசிகர்கள் புளகாங்கிதம்
இந்த போட்டோக்களை பார்த்ததும் அவருடைய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறதாம் .மீண்டும் இவரை இந்த மாதிரி அடாவடியாக பார்க்கும்போது அவருடைய ரசிகர்கள் அவருக்காக கமெண்டுகளை கொட்டி தீர்த்து வருகிறார்கள். பலரும் சீக்கிரமாக சீரியலில் உங்களை காண்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள் என்றுதான் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அவரும் வாய்ப்பு கிடைச்சா வந்துவிடுவேன் என்று எல்லோரும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். அதுக்குத்தான் இந்த பச்சைத் சொக்கா வா!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications