பாடகர் அறிவுக்கு திருமணம்.. மனைவி இந்த பிரபலம் தானா? நேரில் சென்று வாழ்த்திய இளையராஜா
சென்னை: ராப் பாடல்கள் மூலம் பிரபலமடைந்த பாடல் ஆசிரியர் அறிவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. தன்னுடைய நீண்ட நாள் காதலியான கல்பனாவை திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய திருமணத்தில் இளையராஜா, திருமாவளவன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "காலா" படத்தின் மூலம் பின்னணி பாடகராக பிரபலமானவர் அறிவு. தெருக்குரல் என்று ஆல்பத்தை வெளியிட்டதால் இவர் தெருக்குரல் அறிவு என்று பிரபலமானார். அதுபோல ராப் பாடல்கள் பாடி சமூக சிந்தனைகளை வளர்த்து வரும் இவர் கடந்த ஆறு வருடங்களில் நிறைய பாடல்கள் பாடி இருக்கிறார்.

இன்று இவருக்கு சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண பங்க்ஷனில் இசையமைப்பாளர் இளையராஜா, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.
அறிவு திருமணம் செய்திருக்கும் மணப்பெண் கல்பனா சமூக செயற்பாட்டாளராக இருக்கிறார். தொடர்ந்து ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார். அட்டகத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் அதிரை இயக்கத்தில் உருவாகி வரும் தண்டகாருண்யம் திரைப்படத்தில் கல்பனா உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அதுபோல கடந்த ஆண்டு அறிவு இசையில் 12 பாடல்களை கொண்ட "வள்ளியம்மா பேராண்டி" என்ற ஆல்பம் பாடல் வெளியாகி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டி தொட்டி எல்லாம் வள்ளயம்மா பேராண்டி பாடல் பிரபலமாகி இருந்தது. அந்த ஆல்பத்தில் உள்ள 'தொடாத' என்ற பாடலின் மியூசிக் வீடியோவை இயக்கியதும் கல்பனா தான்.

அது போல இவர்களுடைய திருமணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகண்டு தம்பதிக்கு அம்பேத்கர் புகைப்படத்தை பரிசாக வழங்கியிருக்கிறார். அப்போது அம்பேத்கர் குறித்த ராப் பாடலை அறிவு பாட அவரோடு சேர்ந்து திருமாவளவனும் பாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications