சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. ரட்சிதாவை பார்த்து ரசிகர்கள் கலாய்ப்பு!
சென்னை: சில நடிகைகள் நீச்சல் உடையிலும் கலக்கல் கவர்ச்சி உடைகளையும் கலக்கி கொண்டிருக்கும் போது நாம் இருவர் நமக்கு இருவர் புகழ் ரட்சிதா சேலை கட்டிக்கொண்டு விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அழகை வர்ணித்து தள்ளுகிறார்கள். நடிகைகளிலேயே ரொம்ப ஹோம்லியும் கூடவே, சற்றே ஈர்ப்பும் கூடிய நடிகைகளில் ரட்சிதாவுக்கு தனி இடம் உண்டு.
ரட்சிதா முதன் முதலில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக அறிமுகமானார். இந்த சீரியலில் கருப்பாக இருக்கும் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் கலக்கிக் கொண்டிருந்தார். கருப்பாக இருந்தாலும் இவர் அவ்வளவு அழகாக இருந்தார்.

முதல் சீரியல்
முதல் சீரியலில் அவர் கணவரான தினேஷ் தான் அந்த சீரியலில் கதாநாயகன்ஆக நடித்திருந்தார் . இந்த சீரியல் 2011 முதல் 2012 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 க்கு ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்யாணி ரேவதி ஆகவும் மற்றும் ரட்சிதா மகாலட்சுமி ஜோதியாகவும் நடித்திருந்தார்கள்.

கருப்பாக இருந்தாலும்
இந்த சீரியலில் கருப்பாக இருப்பவர்களுக்கு இருக்கும் தாழ்வுமனப்பான்மையும், கருப்பாக இருந்தால் அவர் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவங்களை இந்த சமூகம் புறந்தள்ளுவது குறித்து அழகாக நடித்திருப்பார் .இந்த சீரியலில் இவருக்கு ஜோடி தினேஷ் கார்த்திக்காக நடித்திருப்பார். இதன் பிறகுதான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

சரவணன் மீனாட்சி சீரியல்
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீசன்2 ,சீசன் 3. இவர் மீனாட்சியாக நடித்திருப்பார். இந்த சீரியல் மூலமாக இவர் புகழின் உச்சிக்கே சென்று விட்டார். பிரிவோம் சந்திப்போம் சீரியலுக்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அவர் ஆடையெல்லாம் கிராமத்து சாயலில் அணிந்திருந்தாலும் அவருடைய அழகு மெருகேறி ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.

2வது சீசன்
பிரிவோம் சந்திப்போம் 2012- 13 இரண்டாம் சீசன் ஆகவும் ஒளிபரப்பப்பட்டது. இதிலும் இவர் ஜோடியாக நடித்திருந்தார் .இரண்டாம் பாகமும் சூப்பர் ஹிட்டாக ஆனது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதுமட்டுமல்ல சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். ஜூனியர் சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3.0 போன்ற ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறார்.

கணவருடன் நாச்சியாபுரம் சீரியல்
அதன்பிறகு தனது காதல் கணவருடன் ஜீ தமிழில் நாச்சியார்புரம் என்னும் சீரியலில் ஜோதி ஆகவே நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலிலும் அதே சேலை கட்டிக்கொண்டு காஸ்ட்யூமில் வந்தாலும் இவரை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம்.

நாம் இருவர் மகா
இப்போ விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா வாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .இந்த சீரியலில் இவர் டீச்சர் ஆகவும் மாயனின் மாமன் மகளாகவும் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் மாயன் - தேவி கேரக்டர் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக இருந்தது. அந்த சீரியல் முடிக்கப்பட்டு இரண்டாம் பாகம் எடுக்கும் போது சில ரசிகர்கள் ட தயங்கி இருக்கிறார்கள்.

மகா அமர்க்களம்
இனி இந்த இடத்தில் தேவியை வைத்து பார்க்காமல் வேற கேரக்டரில் எப்படி பார்ப்பது என்று .ஆனால் இந்த சீரியல் ஒளிபரப்பாக பட்டதும் மாயன் ஜோடி ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கிறதாம். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் சூட்டிங் நேரங்களிலும் சின்ன சின்னதா போட்டோஸ் விதவிதமாக எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார்.

அழகிய சேலையில்
அதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை புகழ்ந்து தள்ளுகிறார்கள். சேலை கட்டிக்கொண்டு விளம்பர மாடல் போல விதவிதமாக எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். இணையதளத்திற்கு போனாலே இப்ப எல்லா நடிகைகளும் படுகவர்ச்சியாக போட்டோக்களை போட்டு இருக்கிறார்கள் .அதில் இப்படி சில நல்ல விதமான போட்டோக்களை பார்க்கும்போது நல்லா இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications