இலங்கைக்கு கெனிஷாவுடன் சென்ற ரவி மோகன்.. காரணம் இதுதானா? ஆர்த்தி ரவி வெளியிட்ட திடீர் பதிவு
சென்னை: நடிகர் ரவி மோகன் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி இடம்பிடித்து வருகிறார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அவர் அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விவாகரத்துக்கான காரணங்களும் பலதரப்பட்ட கருத்துக்களை கிளப்பின. இந்த நிலையில் ரவி மோகன் மற்றும் அவருடைய தோழி கெனிஷா இருவரும் இலங்கைக்கு சென்று இருக்கின்றனர். அதே நேரத்தில் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மறைமுகமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இது பலருடைய கவனத்தைை பெற்று வருகிறது.
ரவி மோகன் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் நெருக்கமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதன் காரணமாகவே அவர் மனைவியை விவாகரத்து செய்வதாகவும் கூறப்பட்டது. இருவரும் இணைந்து கோயில்களுக்கு சென்றதும், திருமண நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டதும் இதற்கு வலு சேர்த்தன. அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ரவி மோகன் மற்றும் கெனிஷா போட்டோஸ்
ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் தங்கள் உறவு குறித்து தனித்தனியாக பேட்டி அளித்தனர். ஆர்த்தி, ரவி மோகன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், ரவி மோகன் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரவி மோகன் தனியாக இலங்கைக்கு செல்லவில்லை, கெனிஷாவும் உடன் சென்றுள்ளார். இருவரும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கெனிஷா பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கச்சேரி
ரவி மோகனின் ஆலோசனையின் பேரில் கெனிஷா இலங்கையில் இசை கச்சேரி நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். விரைவில் இருவரும் இணைந்து இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவி மோகன் தற்போது 'கராத்தே பாபு', 'பராசக்தி', 'ஜெனீ', 'தனி ஒருவன் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

ஆர்த்தி ரவி பதிவு
இந்த நிலையில் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒருவர் தன்னுடைய சொந்த நாயை விட்டுவிட்டு இன்னொரு நாயை கொஞ்சும் போது சொந்த நாய் மனநிலை எப்படி இருக்கும் என்பது போன்று ஒரு ஸ்டோரி பகிர்ந்து இருக்கிறார். இது பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. அதை பார்க்கும் பலரும் இது ரவி மோகனுக்கு பதிலடியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications