Ravi Mohan: ரவி மோகன் தொடர்ந்த வழக்கு! நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி! கடைசியில் இப்படி ஆகிடிச்சே!
சென்னை: சினிமாவில் டைட்டில் வைக்கிறதுக்குள்ள ஒரு படத்தோட தயாரிப்பாளருக்கு வர்ற பிரச்சனை சும்மா இல்லை! இப்போ பெரியப் பரபரப்பை கிளப்பியிருக்கிறது நடிகர் ரவி மோகன் தயாரிச்சு நடிக்கும் படத்தோட டைட்டில் தான்! அவர் ஆசையா வச்ச "ப்ரோ கோட்" (BRO CODE) டைட்டிலுக்கு, அதே பேர்ல சரக்கு விக்கிற மதுபானக் கம்பெனி வழக்கு (CASE) போட்டு, இப்போ டெல்லி உயர் நீதிமன்றத்துல ரவி மோகனுக்கு பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

மதுபான கம்பெனி போட்ட வழக்கு
இண்டோ-ஸ்பிரிட்-பிவரேஜஸ் (Indo-Spirit Beverages)ங்கிற ஒரு கம்பெனி, இந்தியச் சந்தையில "PRO CODE"ன்ற பேர்ல மதுபானம் விற்று, நல்ல ஃபேமஸ் ஆகி இருக்கு. ரவி மோகனும் தன்னோட புதுப் படத்துக்கு அதே "ப்ரோ கோட்" என்ற பேரையேத் தேர்ந்தெடுத்தாரு. இந்த படத்துல எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத்னு பெரிய பட்டாளமே நடிக்குது. "அதேப் பேர்ல சினிமா வந்தா, எங்கப் பிராண்டுக்கும் நுகர்வோருக்கும் குழப்பம் வரும். இது வியாபார ரீதியாத் தப்பு"ன்னுச் சொல்லி இண்டோ-ஸ்பிரிட் நிறுவனம் கோர்ட்டுக்கு போனாங்க!
சென்னை டு டெல்லி கோர்ட்
ரவி மோகனுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் நிம்மதி கிடைச்சாலும், இப்போ டெல்லியில திரும்பவும் பிரச்சனை ஆகிடுச்சு! முதல்ல இந்த டைட்டிலை பயன்படுத்தத் தடுக்கக் கூடாதுன்னுச் சொல்லி ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்துல மனு போட்டப்போ, அந்த மதுபானக் கம்பெனிக்கு எதிரா மூணு மாசம் இடைக்காலத் தடை கிடைச்சது. ஆனா, மதுபானக் கம்பெனி உடனே டெல்லி உயர் நீதிமன்றத்துல ரவி மோகன் ஸ்டூடியோஸ்க்கு எதிரா வழக்கு போட்டாங்க. அதை விசாரிச்ச தனி நீதிபதி, "ப்ரோ கோட் டைட்டிலைப் படத்துக்குப் பயன்படுத்தக் கூடாது"ன்னு சொல்லி இடைக்காலத் தடை போட்டு உத்தரவு போட்டாரு.
ரவி மோகனுக்கு அடுத்த பஞ்சாயத்து
தனி நீதிபதி போட்ட அந்த தடையை நீக்கணும்னு சொல்லி ரவி மோகன் டெல்லி உயர் நீதிமன்றத்துல மேல்முறையீடு மனு போட்டாரு. அந்த வழக்கை விசாரிச்ச நீதிபதிகள், "தனி நீதிபதி போட்ட இடைக்காலத் தடை உத்தரவை இப்போதைக்கு நீக்க முடியாது"ன்னுச் சொல்லி ரவி மோகனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துட்டாங்க! மேல்முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்கச் சொல்லி மதுபானக் கம்பெனிக்கு உத்தரவிட்டுட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் முதல் வாரத்துக்குத் தள்ளி வச்சிட்டாங்க!
ஏற்கனவே ரவி மோகன் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அவருடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்த பிறகு அவருடைய மனைவி ரவி மோகன் பற்றிய பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். அதுபோல ரவி மோகனம் அவருடைய மனைவி மீது குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வராத நிலையில் தான் புதியதாக தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படத்திலேயே இப்போது பிரச்சனை மேல பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications