Ravi Mohan: என்னை வாழ்த்த வேண்டாம் என சிலர் நினைக்கிறார்கள்! அவர்களுக்கு பதில் இதுதான்! ரவி மோகன் எமோஷனல்
சென்னை: நடிகர் ரவி மோகன், தான் எதிர்கொண்ட பல சர்ச்சைகளைக் கடந்து, தனது புதிய தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்'ஐ சென்னையில் கோலாகலமாகத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டு, ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக, நடிகர் ரவி மோகன், நடிகர் கார்த்தி குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள், இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

பிரபலங்களின் படையெடுப்பு
ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன் எனப் பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ரவி மோகனுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் ஹாசினியாக நடித்த நடிகை ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் வருகை தந்தது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
கார்த்தி குறித்து ரவி மோகன் உருக்கம்
நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய ரவி மோகன், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். "இங்குதான் நான் இருப்பேன். என்னை வாழ்த்த வேண்டும் என்று வந்திருப்பவர்கள் வாழ்த்துங்கள். சிலர் வாழ்த்த வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்குதான் நான் இருப்பேன். என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும், என் மீது அக்கறை கொண்ட நிஜ வந்தியத்தேவன் கார்த்தி" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். அவரது இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இரண்டு புதிய படங்களின் அறிவிப்பு
ரவி மோகனின் இந்த விழாவில், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு புதிய படங்களின் பூஜை நடத்தப்பட்டது.
1. 'ப்ரோ கோட்' (BRO CODE): 'டிக்கிலோனா' மற்றும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ரவி மோகனே தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். 2. 'அன் ஆர்டினரி மேன்' (An Ordinary Man): இரண்டாவது சர்ப்ரைஸாக, ரவி மோகனே தயாரித்து இயக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
ரவி மோகனின் கைவசம் உள்ள படங்கள்
ரவி மோகன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில், முதல்முறையாக ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அதைத்தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜீனி படத்தில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். 'கராத்தே பாபு': கணேஷ் பாபு இயக்கும் இந்தப் படமும் ரவி மோகன் கைவசம் உள்ளது.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் ரவி மோகன் எடுத்திருக்கும் இந்த புதிய அவதாரம், அவரது அடுத்த கட்ட பயணத்தில் ஒரு முக்கியமான அடியாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications