ஒரு பிரச்சனை முடிவதற்குள் இன்னொரு பிரச்சனை.. ரவி மோகனுக்கு கோர்ட்டில் கிடைத்த முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவிமோகனின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகவே தனிப்பட்ட பிரச்சனைகள், குடும்ப விவகாரம் என அடுத்தடுத்து பரபரப்பான விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சினிமா தொடர்பான இன்னொரு விவகாரமும் இப்போது நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.

புது பட பிரச்சனை

ரவி மோகன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் தான் "ப்ரோ கோட்" இந்த படத்தை மிராக்கில் மூவிஸ் தயாரிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதுஹ இதற்கு இடையில் படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க ரவி மோகன் முடிவு செய்தார். படத்தின் பெயரும் "ப்ரோ கிளப்" என்று மாற்றப்பட்டிருந்தது. இங்குதான் பிரச்சனை பெரிதாக உள்ளது.

நடிகர் அப்பாஸ் மகள் இவங்க தானா? ரவி மோகன் மனைவி ஆர்த்தி கொடுத்த கமெண்ட்.. குவியும் வாழ்த்து
மிராக்கிள் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷ்ருதி நல்லப்பா படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளுக்காக தங்கள் தரப்பில் செலவிடப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படவில்லை என்று கூறி நெட்பிளிக்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்டவருக்கு கடிதங்கள் அனுப்பியதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக கூறி ரவி மகன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.

Ravi Mohan Court Case

ரவி மோகன் கொடுத்த வழக்கு

ரவி மோகன் கொடுத்த மனுவில், செலவிட்ட பணத்தைக் கேட்டு சட்டப்படி வழக்கு தொடரலாம். ஆனால் அதை விடுத்து எனக்கு எதிராக அவதூறு பரப்புவதை அனுமதிக்க கூடாது என்று ரவி மோகன் தரப்பு கூறி இருக்கிறது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ரவிமோகனின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஷ்ருதி நல்லபாவிற்கு உத்தரவிட்டார். வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையும் அன்றைய தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Ravi Mohan Court Case

வழக்கு விபரம்

இது ரவி மோகனுக்கு சாதகமான தீர்ப்பு என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு அவருடைய மனுக்கு எதிர் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட பட்டு இருக்கிறது. அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகு தான் நீதிமன்ற விசாரணையில் அடுத்த முடிவு தெரிய வரும். ஏற்கனவே ரவி மோகனின் குடும்ப விவகாரம் காரணமாக நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அழைந்து வரும் ரவி மோகனுக்கு இப்போது இது புது பிரச்சினையாகி இருக்கிறது.

ரவிமோகன் அவருடைய மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்ததுதான். சினிமாவில் ரவிமோகனை ஜெயம் ரவியாக கொண்டாடிய ரசிகர்கள் இப்போது அவர் ரவி மோகன் என்று பெயர் மாற்றிய பிறகும் அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பது குறித்து பேசி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+