நடிகர் அப்பாஸ் மகள் இவங்க தானா? ரவி மோகன் மனைவி ஆர்த்தி கொடுத்த கமெண்ட்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் இளம்பெண்களின் மனதை கவர்ந்த ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரே படத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டதை பெற்ற அப்பாஸ் அதற்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் அந்த பதிவிற்கு ரவிமோகனின் மனைவி கொடுத்த கமெண்ட்டும் கவனம் பெற்று வருகிறது.

சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த அப்பாஸ் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் தன்னுடைய மகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அப்பாஸ், அதில் wishing you a very happy birthday dearest Emira missing you. Love you be happy and. Dream big என்று சொல்லி இருக்கிறார். இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவியின் கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஆர்த்தி ரவி தனது கமெண்டில், Happy birthday to my gorgeous Emu darling. God bless you always bacha என்று தெரிவித்துள்ளார்.

Abbas actor Abbas

ஆர்த்தி ரவி பதிவு

அதாவது, மிகவும் நெருக்கமாக "என் அழகான எம்மு டார்லிங்" என்று அவர் குறிப்பிட்டு இருக்கும் நிலையில் அந்த ஒரு கமெண்ட் அதிகமான லைக் பெற்று வருகிறது. அப்பாஸ் குடும்பத்திற்கும் ஆர்த்தி ரவி குடும்பத்திற்கும் பல வருடங்களாக நட்பு இருக்கிறது. அப்பாஸ் மனைவி எரும் அலி திரைத்துறையுடன் தொடர்புடையவர் தான். ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளவர். தன்னுடைய கணவர் அப்பாஸ் நடித்த சில படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். அப்பாஸ் எரும் அலி தம்பதிக்கு எமிரா என்ற மகளும் என்ற அய்மான் என்ற மகனும் உள்ளனர்.

Abbas actor Abbas

குடும்ப நட்பு

அதுபோல இதற்கு முன்பு அப்பாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கூட ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் கலந்து கொண்டனர். அப்போது திரை உலகை சார்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். பல வருஷங்களாகவே ஆர்த்தி ரவி அப்பாஸ் குடும்பத்துடன் பழகி வரும் நிலையில் அப்பாஸ் மகளுக்கு இப்போது உரிமையாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Abbas actor Abbas

நடிகர் அப்பாஸின் ஆரம்ப காலம்

அப்பாஸின் நிஜமான பெயர் மிஸ்ரா அப்பாஸ் அலி என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. மாடலிங் துறையில் இருந்த அவர் 1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். வினித், அப்பாஸ், தபு நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்பாஸை ஒரே இரவில் பிரபலமான இளம் கதாநாயகனாக அந்த படம் மாற்றிவிட்டது.

மனைவி இறந்த 4 வருட தனிமை வாழ்க்கை.. பிள்ளைகளுக்காக நடிகர் பரத் கல்யாண் எடுத்த முடிவு! உருக்கம்
அதற்குப் பிறகு விஐபி, பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார், போலீஸ், கண்டு கண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். கடந்த 1997 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளரான எரும் அலியை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தன்னுடைய வேலையில் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

Abbas actor Abbas

அப்பாஸ் கொடுத்த விளக்கம்

ஆனால் சில வருடங்களாக அப்பாஸ் சினிமாக்களில் பெரிதாக நடிக்காமல் இருந்தார். அப்போது கூட அவர் வெளிநாட்டில் பெட்ரோல் பல்கில் வேலை பார்த்து வந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதற்கு கூட அவர் விளக்கம் கொடுத்திருந்தார். தமிழ்நாட்டில் தான் நான் எல்லோருக்கும் பிரபலம்‌ ஆனால் வெளிநாட்டில் நான் யாருக்கும் தெரியாது. எனக்கு என்ன வேலை பிடித்திருக்கிறதோ அதை மனப்பூர்வமாக செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்லி இருந்தார்.

தனுஷ் அரசியலுக்கு போய்விட்டால் இதுதான் நடக்கும்! இழப்பு.. நடிகர் விஷால் ஓபன்
சமீபத்தில் அவர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ஹாப்பி ராஜ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் புதிதாக எந்த படத்திலும் கமிட்டானது போல இல்லை. ஆனால் இப்போது அவருடைய மகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+