Ravi Mohan: விழாவில் ரவி மோகனின் அம்மா கன்னத்தை கிள்ளிய கெனிஷா! மோகன் ராஜா ரியாக்ஷன்! சம்பவம் இருக்கு
சென்னை: பிரபல நடிகர் ரவி மோகன், பல சர்ச்சைகளைக் கடந்து, தனது புதிய தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், ரவி மோகனின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது அண்ணன் மற்றும் தாய் கலந்து கொண்டனர். அப்போது, பாடகி கெனிஷா, ரவி மோகனின் தாயின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரவி மோகன் பிரச்சனை
ரவி மோகன் குடும்ப பிரச்சனை சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்த சந்ததியாகத்தான் இருக்கிறது. ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த வருடத்தில் இவர்கள் பிரிய போவதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து இருந்தார். பிறகு இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ரவிமோகன் பாடகி கெனிஷாவை காதலிப்பதாக வதந்திகள் பரவின.
தயாரிப்பு நிறுவனத் தொடக்க விழா
சில வருடங்களாகப் பெரிதாக படங்களிலும் நடிக்காமல் இருந்த ரவி மோகன், இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த விழாவில், ரவி மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அப்போது, ரவி மோகனின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் உடன் வந்தனர். கெனிஷா, ரவி மோகனின் தாயின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.
அப்போது ரவி மோகனின் அண்ணன் ரவி மோகன் தோளில் தட்டிக் கொடுத்து சிரித்தபடி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒரே நிற உடைகளை அணிந்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வு, ரவி மோகனுக்கும் கெனிஷாவுக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பை வெளிப்படுத்துவதுடன், சர்ச்சைகள் எதுவாக இருந்தாலும், அவர்கள் தங்களின் நட்பை நிலைநிறுத்துகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
மோகன் ராஜா ரியாக்ஷன்
அதுபோல இந்த பங்க்ஷனில் ரவிமோகனின் இரண்டு மகன்களும் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, "மனிதர்களை ஏமாற்றலாம் கடவுளை ஏமாற்ற முடியாது" என்று வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவில் கெனிஷா உடன் தான் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹோம் மூவி மேக்கர் தயாரிப்பு நிறுவனத்தை ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தில் தான் ஜெயம் ரவி நடித்த பூமி அடங்கமறு மற்றும் சைரன் போன்ற படங்கள் வெளியானது.
10 மாதமாக இஎம்ஐ பாக்கி! சென்னை ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ்! வாங்க மறுத்த நடிகர் ரவி மோகன்
ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் தங்களுடைய தயாரிப்பு நிறுவன திறப்பு விழாவிற்கு பல பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுத்திருந்தனர். இந்த வரிசையில் கமல்ஹாசனுக்கு அழைப்பு கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது அதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். தயாரிப்பு நிறுவனம் தொடக்க விழாவிலும் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக வெள்ளை நிற உடையில் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications
