10 மாதமாக இஎம்ஐ பாக்கி! சென்னை ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ்! வாங்க மறுத்த நடிகர் ரவி மோகன்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளார். வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி நோட்டீஸ் கொடுக்க வந்த கொரியர் ஊழியரை திரும்பி அனுப்பிவிட்டனராம்.
ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி மோகன், பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். இவர் காதலித்து ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி வேறு யாருமில்லை, சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள்தான்.

இவர்களுக்கு ஆரவ், ஆர்யன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் ஆரவ் டிக்டிக்டிக் என்ற திரைப்படத்தில் ரவியுடன் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தார். இதற்கு ஆர்த்தி மறுத்தார்.
ரவி மோகன்
எனினும் ரவி, தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் ரவி மோகன் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தாத நிலையில் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய மனுதாக்கல் செய்யுமாறு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பராசக்தி
தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை ரவி தொடங்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாக ரவி மோகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பு நிறுவனம்
இதனிடையே பாபி டச் கோல்டு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ரவி ஒப்புக் கொண்டாராம். அதற்காக முன்பணமாக ரூ 6 கோடி பணத்தை திருப்பி செலுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரவி மோகன் தனது சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நிலையில் அவரின் சொத்துக்களை முடக்கும் வகையில் மனுதாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹைகோர்ட் அனுமதி வழங்கியது.
பிரைவேட் நிறுவனம்
இது தொடர்பாக பாபி டச் கோல்டு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் "எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இரு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ரூ 15 கோடி
முதல் படத்திற்கு ரூ 15 கோடி ஊதியம் பேசப்பட்டு ரூ 6 கோடி முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் போட்டதன்படி எங்கள் நிறுவன படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் அவர் நடித்ததால் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கேட்டோம். ஆனால் அவர் தரவில்லை.
ரூ 6 கோடி தராத ரவி
ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிய படத்தை தயாரித்து வருகிறார். எனவே எங்களிடம் வாங்கிய 6 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து உத்தரவாதம்
இதையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், ரூ 6 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடிகர் ரவிக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
6 கோடி பணம்
இதனால் ரூ 6 கோடி பணத்திற்காக அவருடைய சொத்துக்களை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஹவுஸ் லோன் இஎம்ஐ
இந்த நிலையில் ஜெயம் ரவி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி அங்கு மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில் அந்த வீட்டிற்கு ரவி செல்வதில்லை.
10 மாதங்களாக தவணை செலுத்தவில்லை
அது போல் அந்த வீடு எச்டிஎப்சி வங்கியில் லோன் போட்டு வாங்கிய நிலையில் கடந்த 10 மாதங்களாக தவணை தொகையையும் அவர் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து வீட்டை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் முடிவு செய்து ரவிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன்
இந்த நிலையில் கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீஸை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்த ரவி மகன் தரப்பு, வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ஊழியரை திருப்பி அனுப்பிவிட்டதாம். குடும்பத் தகராறு, கேரக்டர் டேமேஜ், பட தயாரிப்பு நிறுவனம் குடைச்சல், இத்தனைக்கும் மத்தியில் தற்போது வங்கி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸை அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications