"குறும்பா என் உலகே நீ தான்டா” மகனோடு மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த ரவி மோகன்.. ஆர்த்தியின் அம்மா போட்ட போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நடிகர் ரவிமோகன் கடந்த வருடத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். அதற்கு பிறகு அவருடைய குடும்ப செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ரவி மோகன் தன்னுடைய மகன்களோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதே போல ஆர்த்தியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், ரவி மோகன் மகனோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ரவி மோகன் சமீப காலமாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையியில் நடந்த விஷயங்களால் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் சர்ச்சையில் சிக்காமல் இருக்கும் நடிகர்கள் லிஸ்டில் இருந்த ரவி மோகன் கடந்த வருடத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். அதற்கு முன்பு இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதுவெல்லாம் வதந்தியாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் கடைசியில் அதுதான் உண்மை என்று ரவி மோகன் அறிவித்திருந்தார்.

Ravi Mohan jeyam ravi Sujatha Vijayakumar

சுஜாதா விஜயகுமார் அறிக்கை

அதேபோல ரவி மோகன் மீது சில குற்றச்சாட்டுகளை ஆர்த்தி அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் கொடுத்து ரவி மோகனும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படியாக சில அறிக்கைகளை மாறி மாறி வெளியிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் வாங்கிய கடன்களுக்கு தன்னை பொறுப்பு ஏற்க செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ரவி மோகன் வைத்திருந்தார். அதற்கு ஆர்த்தியின் அம்மாவான சுஜாதாவும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ரவி மோகன் போஸ்ட்

இப்படியாக மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் நீதிமன்றத்தில் இவர்கள் வெளியிட்ட அறிக்கையை நீக்க சொல்லி இருந்தனர். அதனால் அந்த அறிக்கைகள் இப்போது நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரவி மோகன் தன்னுடைய மகனோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு காரணம் தன்னுடைய மூத்த மகன் ஆரவின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு மகன்களையும் சந்தித்து சிறிது நேரம் மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை ரவி மோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பாட்டியின் பதிவு

அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் "என் பெருமை என் குறும்பாக்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல ரவி மோகனின் மகன் ஆரவுடன் எடுத்த புகைப்படத்தை தயாரிப்பாளர் சஜாதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் என் "லிட்டில் ஸ்டார் ஆரவ் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ வேகமாக வளர்கிறாய். ஆனால் நீ எப்போதும் எங்கள் சிறிய குழந்தையாக தான் இருக்கிறாய். நாங்கள் ஒவ்வொரு நாளும் சிரிக்க நீ தான் காரணம். நீ எங்கள் வாழ்க்கையின் ஒளி. கடவுள் உங்களுக்கு தைரியத்தையும் வாழ்க்கையில் சவால்களை எதிர்க்கும் வலிமையையும் அருளட்டும். உன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிறைவேற கடவுளுடன் பிரார்த்திக்கிறேன். நீ எப்போதுமே அற்புதமானவர், அதுபோல சிறந்ததை அடைய தகுதியானவர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே" என்று பாட்டியாக சுஜாதா சந்தோஷமாக தன்னுடைய பேரனோடு குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தையும் இப்போது அவருடைய புகைப்படத்தையும் சேர்ந்து பகிர்ந்து இருக்கிறார்.

Ravi Mohan jeyam ravi Sujatha Vijayakumar

அதுபோல சுஜாதா வெளியிட்ட பதிவில் ஆரவின் பிறந்தநாளுக்கு ரவி மோகனின் அம்மாவும் ஆரவை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். ரவி மோகனின் அம்மா மற்றும் ஆர்த்தி அம்மா சுஜாதா இருவரின் தோளிலும் கை போட்டு அந்த புகைப்படங்களில் இருக்கிறார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+