ஐயோ கல்யாணத்தையே 10 நாளாக வச்சு செய்றாங்க.. இதில் ரிசப்ஷன் வேறயா.. யோசிப்போம்.. ரவீந்தர் "உருக்கம்"
சென்னை: அய்யோ ரிசப்ஷனா நான் பெரிசா பண்ணலாம்னு யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அதை வச்சியே இன்னும் 10 நாட்களுக்கு அதையே பெரிதாக்கிவிடுவார்கள் என்பதால் யோசித்து கொண்டிருக்கிறேன் என ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து திடீரென செப்டம்பர் 1 ஆம் தேதி மகாலட்சுமியும் ரவீந்தரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் கடந்த 10 நாட்களாகியும் வைரலாகி பேசும் பொருளாகியுள்ளது.
இவர்களது திருமணம் திடீரென வைரலானதற்கு காரணம் ரவீந்தர் வனிதா விஜயகுமார் திருமணத்தில் கூறிய கருத்துகள், ஒன்றரை ஆண்டுகளாக இவர்களது காதல் ஒரு சொட்டுக் கூட லீக்காகாதது, இப்படி உடல் அமைப்பு கொண்டவருக்கு இத்தனை அழகான மனைவியா என்பது உள்ளிட்டவையே ஆகும்.

90 கிட்ஸ்
இவர்கள் திருமணம் முடிந்த பிறகு கூட இவர்களது இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக வெளியிட்ட புகைப்படங்களால் 90 கிட்ஸ்கள் வயிற்றெரிச்சலில் உள்ளார்கள் என சொல்லலாம். இந்த நிலையில் மகாலட்சுமிக்காக ரவீந்தர் ஒரு சில பரிசுகளை கொடுத்துள்ளார் என்ற தகவல்களும் வைரலாகி வருகின்றன.

ரவீந்தர்
இதையெல்லாம் ரவீந்தர் நேற்று முன் தினம் திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக இன்ஸ்டா லைவில் பேசினார். அப்போது சில விஷயங்களை மறுத்தார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். தான் வனிதா திருமணத்தை ஏன் எதிர்த்தேன் என்பதையும் தெரிவித்தார்.

ரிசப்ஷன் எப்போ
இந்த நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் திருமண வரவேற்பு எப்போது என கேட்டார். அதற்கு ரவீந்தரோ, ரிசப்ஷை பெரிதாக வைக்கலாம் என யோசித்திருந்தேன். ஆனால் இதையும் ஒரு 10 நாட்களுக்கு பெரிதாக்கிவிடுவார்கள் என்பதால் யோசித்து வருகிறேன் என தெரிவித்திருந்தார்.

திருமணம் திருப்பதியில்
இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்ததால் ஊரை கூட்டி வரவேற்பு வைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் இவர்களது திருமணத்தையே 10 நாட்களாக பெரிதாக்கி வரும் நெட்டின்சன்கள் இதையும் பெரிதாக்கிவிடுவார்கள் என்பதால் யோசிக்கிறார். என்ன முடிவு எடுப்பாரோ, நமக்கு கண்டென்ட் கொடுப்பாரா இல்லையா என்ற யோசனையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் உள்ளார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications