Radhika Sarathkumar: சாப்பிடக் கூட பணம் இல்லாம என் அம்மா கஷ்டப்பட்டாங்க! ராதிகா மகள் ரயான் உருக்கம்
சென்னை: நடிகை ராதிகா தான் குழந்தையாக இருக்கும் போது அவர் பிரட் வாங்கக் கூட முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டதாக அவருடைய மகள் ரயான் உருக்கமாக தெரிவித்துள்ளார். பிறகு அம்மா எப்படி முன்னேறினார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
ராதிகா நடிகை, தயாரிப்பாளர், சீரியல் நடிகை, சீரியல் தயாரிப்பாளர், அரசியல்வாதி, மனைவி, தாய், பாட்டி, மாமியார் உள்ளிட்ட பல்வேறு ரோல்களை திறம்பட கையாண்டு வருகிறார். இது எல்லாவற்றையும் விட அவர் மிகவும் தைரியமானவர்.

தனது மனதிற்கு தவறு என பட்டால் அங்கேயே அடித்துவிடக் கூடிய சுபாவம் அவருக்கு இருக்கிறது. இதனாலேயே சினிமா ஷூட்டிங்கின் போது யாரும் அவரிடம் வாலாட்ட மாட்டார்களாம். இவரின் திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விஷயம்.
ரயான் திருமணம்
அவருக்கு மகள் ரயான், மகன் ராகுல் உள்ளனர். இதில் மகன் ராகுல் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் மகள் ரயானுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கு காதல் திருமணம் நடந்தது.
பேத்தியுடன் நேரம்
இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த பேரன் பேத்தியுடன் ராதிகாவும் சரத்குமாரும் நேரத்தை செலவிடுகிறார்கள். இது குறித்த வீடியோக்களை ராதிகாவும் ரயானும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடுவார்கள். ராதிகாவுடன் அவருடைய தாய் கீதாவும் வசித்து வருகிறார்.
சரத்குமாரின் மகள்
இந்த நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நிக்கோலாய் திருமணத்தை ராதிகா முன்னின்று நடத்தி வைத்தார். மறு வீடு வரும் போதும் ராதிகா வீட்டிற்கு புதுமணத் தம்பதி சென்ற போது அவரை வரவேற்று அவர்களுக்கு தேவையான சடங்குகளை செய்தார்.

தலை தீபாவளி
மேலும் தலை தீபாவளியின் போதும் வரலட்சுமியையும் நிக்கோலாயையும் தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து சீர் கொடுத்து அனுப்பினார். அப்படிப்பட்ட தாய் குறித்து அவள் விகடன் சேனலுக்கு மகள் ரயான் பேட்டி அளித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு
அதில் அவர் கூறுகையில் தாத்தா, அம்மா, அப்பா, சித்தி, மாமா என நடிகர்கள் பலர் இருந்தாலும் எனக்கு அந்த நடிப்பு என்பது வரவில்லை. அதனால் நான் சினிமாவுக்குள் வரவில்லை. எனவே என்னை ராதா குடும்பத்துல சேர்க்க வேண்டாம். எனக்கு ஏதேனும் வாய்ப்புகள் வந்ததா என எனக்கு தெரியாது. ஒரு வேளை அம்மாவிடம் யாராவது பேசியிருக்கலாம், அது எனக்கு தெரியவில்லை.
கஷ்டம்
பொதுவாக பேசும் போது அவங்களுக்கு என்ன நடிகை என விமர்சிக்கிறார்கள். ஆனால் அந்த இடத்திற்கு அவர் வருவதற்கு என்னென்ன கஷ்டங்களைபட்டார் என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது. யாருமே திருமணம் செய்யும் போதே விவாகரத்து பெற்றுவிட வேண்டும் என நினைப்பதில்லை. அது போல் குழந்தை பிறந்ததும் தான் தனியாளாகவே குழந்தையை வளர்க்கவும் விரும்புவதில்லை.
துரதிருஷ்டம்
இதெல்லாம் துரதிருஷ்டவசமாக நடந்து விடுகிறது. அப்போது என் அம்மா சிங்கிள் மதராக என்னை கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். எனக்கு என் அம்மாதான் எல்லாமே! அவரை விட்டுவிட்டு நான் இருக்கவே மாட்டேன். அவரும் அப்படித்தான். எனக்கு தினமும் 10 முறையாவது போன் செய்துவிடுவார்.
பேரன் பேத்தி
பேரன் பேத்தி குறித்து கேட்பார். என் தாத்தாவை நான் பார்க்கவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. என் தாத்தா இருந்திருந்தால் நாங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோமே என எண்ணத் தோன்றுகிறது. நான் பிறந்ததால்தான் என் அம்மாவுக்கு நிறைய கஷ்டங்கள் என சிலர் விமர்சிக்கிறார்கள்.

என் சிரிப்பு
ஆனால் என் அம்மா என் சிரிப்பை பார்த்துவிட்டு இந்த குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என நினைத்தாராம். என் அம்மாவுக்கு பிரட் வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்ட காலம் எல்லாம் உண்டு. என்னிடம் சொல்லியிருக்கிறார். பிறகு மெல்ல மெல்ல அவர் இந்த உயரத்தை அடைந்தார்.
தைரியமானவர்
அம்மா தைரியமானவர்தான், ஆனால் குடும்பம் என வந்துவிட்டார் சென்டிமென்ட் ஜாஸ்தி. ஆண்டுக்கு ஒரு முறை நானும் அம்மாவும் எங்காவது ஒரு இடத்திற்கு சென்று அங்கு கிடைக்கும் உணவுகளை சுவைப்போம். அம்மாவும் நன்றாக சமைப்பார். அவருடைய சித்தியிடம் இருந்து கற்றுக் கொண்டார். இலங்கை உணவுகளை நன்றாக செய்வார்.
என் சமையல் பிடிக்காது
ஆனால் நான் செய்யும் சமையல் என் கணவருக்கு பிடிக்காது. அவருக்கு அவர் அம்மா சமையல்தான் பிடிக்கும். என் சமையலை சாப்பிட்டதே இல்லை. எனக்கு இதை செய்து கொடு, அதை செய்து கொடு என கேட்டதும் இல்லை. நான் வெள்ளைக்காரியா என சிலர் கேட்பார்கள். ஆனால் நான் தமிழில் பேசினால் என்னை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
விமான நிலைய சம்பவம்
ஒரு முறை விமான நிலையத்தில் யாரோ ஒருவன் என்னை பற்றி தவறாக பேசினான். உடனே "என்னடா சொன்னே" என கேட்டதும் அவன் அப்படியே ஆஃப் ஆகிவிட்டான். என் பாட்டி என்றால் எனக்கு பிடிக்கும். அவரிடம் இருக்கும் தைரியம்தான் என் அம்மாவுக்கு வந்துவிட்டது.
அம்மாச்சி
அவர் என் குழந்தைகளையும் பார்த்து கொள்வார். என் குழந்தைகள் எல்லாம் அவரை கீதா என பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். ஒரு முறை நான் அவரிடம் "நான் உங்களை பெயரிட்டு அழைத்தால் என்ன செய்வீர்கள்" என கேட்டேன். அதற்கு பாட்டி, பளார் என விடுவேன் என்றார். நான் சிறிய வயதில் என் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டே இருப்பேன். சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து சென்றால் பாரதி ராஜா சார் என்னிடம் விளையாடுவார். என் அம்மாதான் எனக்கு எல்லாமே.
தாத்தா ராதா
என் தாத்தா பற்றி என் அம்மா நிறைய சொல்லியிருக்கிறார். அவருக்கு நக்கல் அதிகம் என எனக்கு தெரியும். என் அம்மா என் தாத்தா மாதிரி என பாட்டி அடிக்கடி கூறுவார். டிசம்பர் 31 ஆம் தேதியானால் போதும் நடித்தது போதும் என என் அம்மா நினைப்பார். ஆனால் அவரால் நடிக்காமல் இருக்க முடியாது. அம்மா எவ்வளவு பிசியாக இருந்தாலும் குடும்பத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார். அவர் மனதிடம் கொண்டவர். "ரயான் நீ அம்மா போல் ஸ்ட்ராங் ஆகு" என் அப்பா அடிக்கடி சொல்வார் என ரயான் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
சரத்குமார் மீது விமர்சனம்
ஒரு முறை ரயான் குழந்தையை சரத்குமார் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய புகைப்படத்தை பார்த்த ஒருவர் சரத்குமாரை அவதூறாக பேசினார். அப்போது ரயான் தனது தந்தை குறித்து பேசியதை கண்டித்து பதிவிட்டிருந்தார். அதில் பொதுவான இது போன்ற ட்ரோல்களை நான் எதேச்சையாக பார்த்தால் கூட மீண்டும் ஒரு முறை போய் படிக்க மாட்டேன்.
சிறு பிள்ளை
நான் சிறு பிள்ளையாக இருந்த போதே இத்தகைய விமர்சனங்களை பார்த்துவிட்டேன். இது எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் நீண்டுவிட்டது. ஒரு திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேற நிறையவே சுயமரியாதையும் துணிச்சலும் தேவை. அதுவும் கைக்குழந்தையுடன் வருவது என்பது எளிதானதல்ல. என்னை தன் குழந்தையாகவே பாசம் காட்டி வளர்க்கக் கூடிய ஆண் என்றால் அது என் தந்தைதான். அவர் கண்களில் நான் ஒரு சுமையாகவே இருந்ததில்லை என உருக்கமாக ரயான் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
