Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டுடைத்த பிரபலம்.. மானத்தை வாங்கிய மணிமேகலை? தலையில் மண் அள்ளி போட்டு.. பிரியங்கா அப்படி சொன்னாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியங்கா - மணிமேகலை விவகாரம் முற்றி வரும் நிலையில், இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது இந்த சம்பவம்தான் என்று வீடியோ ஒன்றை இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள். அதேபோல, 2 தொகுப்பாளர்களுக்கும் பிரச்சனையே வேறு என்று பரபரப்பை கிளப்பியிருக்கிறார் ஆர்.ஜே.ஷா.

பிரியங்காவின் டாமினேஷன்தான், மணிமேகலையை வெளியேற்றிவிட்டது என்று அவரது ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன், மோதலுக்கு காரணமாக அமைந்தது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த "ஆங்கரிக்" சம்பவம் தான் என்று அந்த வீடியோவையும் பகிர்ந்து வருகிறார்கள்.

television priyanka manimegalai

வீடியோ: அந்த வீடியோவில், "நம்ம விஜய் டிவியின் சீனியர் ஆங்கர் சொல்லுங்க, ஜட்ஜஸ்களை எப்படி வெல்கம் பண்ணணும்? வெல்கம் பண்ணும்போது என்னென்ன வார்த்தையை நீங்க யூஸ் பண்ணுவீங்க?" என்று சுஜிதா கேட்டார்.

உடனே பிரியங்காவும், தன்னுடைய ஸ்டைலில் தாமுவை வரவேற்றார்.. இதனை செப் தாமு உட்பட பலரும் கைகளை தட்டி பாராட்டினார்கள்..

சுஜிதா: உடனே சுஜிதா, "நாங்கள் குக்குகள்.. எங்களை குக்குள் என்று சொல்லிவிட்டு, இந்த ஷோவின் சூப்பர் ஸ்டார்ஸ் ஆங்கர்ஸ் நாங்கள்தான் என்று அடுச்சுக்கிட்டு, இப்போ உங்களை வந்து ஜட்ஜஸ்ன்னு சொல்றாங்க" என்று நடுவர்களிடம் சுஜிதா சொன்னார். இதற்கு செப் தாமு, "இன்னையில இருந்து இந்த ஷோவுக்கு ஒரேயொரு ஆங்கர் தான்... அது ப்ரியங்கா" என்றார்.. இதைக்கேட்டதுமே பிரியங்கா துள்ளி குதிக்க, மணிமேகலையின் முகம் வாடிப்போய்விட்டது.

பிறகு, தாமுவுடன் அடிக்கடி பிரியங்கா சேர்ந்து ஆங்கரிக் வேலை செய்வதை கவனித்த மணிமேகலை, நாங்களும் இப்படித்தான் ஆரம்பத்தில் ஆங்கரிங் வேலையை பார்த்தோம்.. கடைசியில "லெட்ஸ் வெல்கம்"ன்னு சொன்னப்போகூட எங்களை டிவியில காட்டல" என்றார்.

ஆங்கரிங்: இதற்கு பிரியங்கா, "மணி, உனக்கு ஒன்னு தெரியுமா? ஆங்கரிங் பண்ணும்போதுதான் நான் டிவியில வந்திருக்கேன்.. குக்கிங் பண்ணும்போது டிவியில் காட்டல.. அதனால், நான் ஆங்கரிங்கே பண்ண போறேன், நீ அங்கேயே இருந்துக்கோ" என்றார்.

இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், இதுதான் மணிமேகலையின் வருத்தத்துக்கு காரணம் என்றும், ஆங்கரிங் வேலையையும் சேர்த்து பார்த்து பிரியங்கா ஆதிக்கம் செலுத்துவதால்தான், நிகழ்ச்சியை விட்டே வெளியேறிவிட்டதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆர்ஜே ஷா: இதற்கு நடுவில், பிரபல நடிகர் ஆர்.ஜே. ஷா, மணிமேகலை - பிரியங்கா இடையே நடந்த விஷயம் குறித்து விஜய் டிவி தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரித்தாராம்.. அதை தன்னுடைய யூடியூப் சேனலிலும் பதிவிட்டிருக்கிறார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. அந்த வீடியோவை அவரே நீக்கிவிட்டாராம்.. ஆனாலும், அவர் சொன்ன விஷயங்களை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அதன் சுருக்கம்தான் இது:

வீடியோவில் ஷா பேசும்போது, "இந்த சீசன் முடியும் வரை நீங்கதான் விஜே.. எல்லோருடன் நல்லா பழகணும். இதுதான் உங்கள் டாஸ்க். அதை அதை செய்ய முடியாது என்றால், வெளியே போங்க" என்று தயாரிப்பு நிறுவனமே சொல்லி மணிமேகலையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டது. மணிமேகலையை ஒன்றும் தானாக வெளியேறவில்லை.

தயாரிப்பு நிறுவனம்: வெளியே வந்த மணிமேகலை இதுகுறித்து வீடியோ போட்டதில்கூட, விஜய் டிவிக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு மாற்று கருத்து உள்ளது.. இங்கு நடப்பதை வெளியே பேசக்கூடாது என்று தெரிந்தும், மணிமேகலை இப்போது செய்திருப்பது விஜய் டிவிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை காயப்படுத்தியிருக்கிறது.

தொகுப்பாளர் இடம் கிடைத்தும்கூட, தனக்கு செட் ஆகவில்லை என்று ஏதோ ஒரு கோபத்தில் அவசரப்பட்டு மணிமேகலை வெளியே சென்றுவிட்டார்... நாங்கள் இதுவரை புரொபஷனலாக இருந்துவருகிறோம், மணிமேகலை புரொபஷனலாக இருந்திருக்கிறாரா?

மணிமேகலை: அடுத்த சீசனில் பிரியங்கா இருக்க மாட்டாங்க.. அதுக்குள்ள மணிமேகலை ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும்? அவங்கள அவங்க தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டார்" என்றெல்லாம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சொன்னார்களாம். இந்த தகவல்களைதான், வீடியோவில் பகிர்ந்து, அதனை நீக்கியும் விட்டாராம் ஆர்ஜே ஷா.

ஆக, மணிமேகலை - பிரியங்கா விஷயத்தில் உண்மையிலேயே என்ன பிரச்சனை? எப்போது நடந்த பிரச்சனை? நிறுவனத்துக்கும் மணிமேகலைக்கும் இடையே நடப்பது என்ன? என்பதெல்லாம் உறுதியாக தெரியாத நிலையில், இணையவாசிகள் பல்வேறு யூகங்களை இப்படி தொடர்ந்து பதிவிட்டு கொண்டேயிருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் பயில்வான் ரங்கநாதனும் பிரியங்காவை விமர்சித்துள்ளார்,.. 2, 3 நிகழ்ச்சியில் பிரியங்காவை பார்த்திருக்கிறேன்.. கன்னத்தை கிள்ளி, இரட்டை அர்த்தத்தில் பேசி சேட்டை செய்வார்... அப்பவே நாம சுதாரித்து, அவருக்கு சரியான கவுன்டர் தந்துவிட்டால், மறுபடியும் நம்ம பக்கம் வர மாட்டார்.. எப்படியாவது தன்வசப்படுத்தி நேயர்களின் ஆதரவை பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+