ரேகா இதை ரொம்ப மிஸ் பண்றாங்களாம்.. ரொம்ப ஏக்கமா இருக்காம்!
சென்னை: விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நாலாவது சீசன் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசனின் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை ரேகாவும் ஒருவர்.
இவர் முதல் வாரத்திலேயே இந்த வீட்டை விட்டு வெளியேறியிருப்பது இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருக்கிறது. இருந்தாலும் தற்போது வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட் தான் வைரலாக பரவி வருகிறது.
இந்த சீசனில் நடிகை ரேகா அறிமுகமாகும்போது எப்படியும் இந்த வீட்டிற்குள் இவர் குறைந்தது ஒரு அறுபது நாட்கள் வரைக்குமாவது இருப்பார் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவருடைய குழந்தைகள் கூட அதைத்தான் ஆசைப்பட்டார்கள் அதுக்காகத்தான் வீட்டிற்குள் வந்து இருக்கிறார்.

அதிர்ச்சியில் ரேகா
ஆனால் தற்போது இவர் இவ்வளவு சீக்கிரமாக வெளியேறி இருப்பது அவருடைய குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைந்து இருந்தாலும் அவருடைய மனநிலை தான் தற்போது ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கிறாராம். அதுவும் இந்த கொஞ்ச நாளைக்கு இந்த வீட்டிற்குள் இருப்பவர்களுடன் இவர் பழகியதால் தான் என்று கூறியிருக்கிறார்.

குழந்தை போல
இந்த வீட்டிற்குள் இவர் இருந்த வரைக்கும் அனைவருக்குமே சாப்பாடு பஞ்சமில்லாமல் தான் எளிமையாக போய்க்கொண்டிருந்தது. எப்போதுமே அனைவரிடமும் உரிமையுடன் தாய் போல தான் நடந்து கொண்டு இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிறர் கிண்டல் பண்ணினாலும் ஒரு குழந்தைபோல அதனை மறந்து விட்டு ஜாலியாக எடுக்கும் மனநிலையில்தான் இருந்து கொண்டிருந்தார்.

அதிர்ச்சிதான்
அடுத்தவர் கஷ்டத்தில் இருக்கும் போது ஆறுதல் கூறுவது சரி தன்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் இளசுகளுக்கு சொல்லிக் கொடுப்பதிலும் சரி இவர் நல்ல ஒரு கேரக்டராக தான் நடந்து கொண்டிருந்தார். ஆனால் இந்த வீட்டிற்குள் இருந்து இவ்வளவு சீக்கிரத்தில் இவர் வெளியேறி இருப்பது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கிறதாம். அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அடிக்கடி வாய்க்கால் வரப்புச் சண்டை போல ஏற்படும் சண்டைகளையும் இவர்தான் இருவரிடமும் பேசி புரிய வைத்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப கேஷுவல்
அது மட்டுமல்லாமல் பல கேம் ஷோக்களிலும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். இவருடைய மேக்கப்பை பார்த்து கன்டஸ்டன்ட் கிண்டல் பண்ணும் போதும் சரி அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக இருந்து கொண்டிருந்தார்.அங்கு இருப்பவர்கள் அனைவரிடமும் நன்றாக பழகினாலும் இவர் ஷிவானியுடன் ரொம்பவே பழகி விட்டாராம்.

ஷிவானி குட்டிம்மா
அதனால்தான் ஷிவானியும் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று சொல்லும்போது கதறி அழுதுவிட்டார். அதுபோலத்தான் ரேகாவும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் இன்ஸ்டாகிராமில் ஐ மிஸ் யு ஷிவானி என்று போஸ்ட் போட்டிருக்கிறார். இது இவருடைய உண்மையான கேரக்டரை வெளிக்காட்டுகிறது என்று பலர் ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

தேங்க்யூ வெரி மச்
மீண்டும் இந்த வீட்டிற்குள் நீங்கள் சென்று உங்களை நிரூபியுங்கள் என்றும் கூறியிருக்கிறீர்கள். அதற்கு அவரும் தேங்க்யூ வெரி மச் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் ஷிவானிக்கு தற்போது ரேகாவின் இந்த போஸ்ட்டை பார்த்து ஷிவானியின் ரசிகர்களும் மெய்சிலிர்த்து தான் போயிருக்கிறாராம் அவர்களும் தங்களுடைய பங்குகளுக்கு ரேகாவுக்கு ஆறுதல் அளித்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications