ஷபானாவை தொடர்ந்து அவரது நெருங்கிய தோழியும் காதல் திருமணம்...அதுவும் இவ்வளவு விரைவிலா??
சென்னை: திடீர் திருமணம் செய்த ஷபானாவை தொடர்ந்து அவரது தோழியும் திருமணத்திற்கு ரெடியாகி விட்டார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக திருமண தேதியை வெளியிட்டுள்ளனர் காதல் ஜோடிகள்.
தொடர்ந்து ஜீதமிழ் கதாநாயகிகள் திருமணம் செய்வதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஒற்றுமையான தோழிகள்
ஜீ தமிழில் வெவ்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாங்கள் எல்லாம் ஒன்றே என்று ஷபானா, ரேஷ்மா முரளிதரன், சைத்ரா ரெட்டி, நட்சத்திரா அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ஒன்றாக சுற்றித் திரியும் பறவைகள் போல ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் முதல் முறையாக சைத்ரா ரெட்டி காதலித்து திருமணம் செய்ததும் தற்போது தொடர்ந்து ஒவ்வொரு தோழியும் திருமணத்தில் காலடி எடுத்து வைக்க தொடங்கியிருக்கின்றனர்.

ஜீ தமிழில் தொடங்கிய காதல்
பூவே பூச்சூடவா சீரியலின் கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்து வந்த மதனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரின் காதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்கள் தற்போது ஒன்றாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபிடெய்லர் சீரியலில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களிடம் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர் இவர்கள் பொறுமையாக சொல்கிறேன் என்று மழுப்பி வந்தனர்.

திருமண நாளை அறிவித்த ரேஷ்மா
தற்போது தான் காதலித்து வந்ததை இலை மறை காயாக வெளியே காட்டிக் கொண்டு வந்த ஷபானா திடீரென்று எளிமையான முறையில் திருமணம் செய்து விட்டதால் அதைத்தொடர்ந்து ரேஷ்மாவிடம் தான் அனைவரும் திருமணம் எப்போது என்று கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் நானும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மதன் திருமண அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அதற்குப்பிறகுதான் இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா தனக்கு திருமண நாளை ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.

வாழ்த்தும் ரசிகர்கள்
ஷபானாவின் திருமணத்தில் கலக்கலாக ஆட்டம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டிய மதன், ரேஷ்மா ஜோடி நவம்பர் 15ஆம் நாள் தங்களது திருமணம் என்பதை மகிழ்ச்சியோடு ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.. 'எங்கள் குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் எங்கள் திருமணம் நவம்பர் 15,2021 அன்று நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களிடம் உங்கள் நிலையான அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. எங்களின் இந்த அழகான பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆசைகளும் தேவை',
என்று போஸ்ட் போட்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்களும் இவருடைய திரைத்துறை நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications