அப்போ இனி புஷ்பா புருஷன் கோபி தானா .. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: இவருக்கு பதில் இவர் என டைட்டில் போடுவது சீரியலில் புதியது அல்ல .ஆனாலும் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் ஜெனிஃபர்க்கு பதிலாக ரேஷ்மா பசுபுலேட்டி களமிறங்கியிருக்கிறார்.
இதைப் பார்த்ததும் குஷியான ரசிகர்கள் மட்டுமல்லாமல் மீம்ஸ்களால் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பிரபலமான சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது .

ரசிகர்களிடம் வரவேற்பு
பொதுவாக பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் இதே கதையை எடுத்திருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர் .ஒரு குடும்பத்தலைவி தன்னுடைய வாழ்க்கையில் படும் கஷ்டங்களையும் ,தனக்கு கணவரிடத்தில் கிடைக்காத அங்கீகாரத்தையும் தான் பெற வேண்டும் என துடிப்பையும் இதில் சித்தரித்துள்ளனர்.

பெண்களிடம் வரவேற்பு
தன்னுடைய பிள்ளைகளை வளர்ப்பதில் தனக்கிருக்கும் பங்களிப்பையும், பொறுமையும் , பெண்கள் செய்யும் தியாகங்களையும் இந்த சீரியலில் காட்டியிருப்பதால் இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானது .மேலும் இந்த சீரியலில் நடித்துவரும் நட்சத்திரங்களும் ஃபேமஸ் ஆகியுள்ளனர் .

ராதிகா வேடத்தில்
அந்த மாதிரிதான் இதில் நடித்து வந்த முக்கிய நடிகை தான் நந்திதா ஜெனிபர் .இவர் இந்த சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாக்கியலட்சுமிக்கு இந்த சீரியலில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போலவே ராதிகாவுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் .அதுவும் இவர் இந்த கேரக்டரில் முழுமையாக தன்னுடைய நடிப்பை வெளிக்கட்டி இவருக்கு ரசிகர்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது .

ரேஷ்மா இணைந்தார்
ஆனால் தற்போது இந்த சீரியலில் இருந்து இவர் விலகுவதாக அறிவித்துள்ளார். அதைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர். இந்த சீரியலுக்கு உங்களுடைய கேரக்டர்தான் செமையாக மேட்ச் ஆனது .இனி நீங்கள் இல்லாத இந்த சீரியலை நாங்கள் பார்க்க மாட்டோம் என பலரும் தொடர்ந்து கமெண்டுகளை போட்டு வரும் நிலையில் விஜய் டிவியிலிருந்து இதற்கான புது ப்ரோமோ வெளியானது .அதில் இவருக்கு பதிலாக பிக்பாஸ் நட்சத்திரத்தை களமிறங்கி இருககின்றனர்.

காதலி வேடத்தில் ரேஷா
அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் கோபிக்கு பாக்கியலட்சுமி மனைவியாகவும் ராதிகா காதலியாகவும் இருந்து வருகிறார் .விஜய் டிவியில் ஒரு ஹீரோவுக்கு இரண்டு கதாநாயகிகள் என்பது புதுசு அல்ல. பல சீரியல்களில் இப்படித்தான் வைத்து வருகின்றனர். ஆனாலும் இந்த சீரியலில் இவர்கள் இரண்டு பேரையும் மேனேஜ் செய்வதில் கோபி படும் திண்டாட்டத்தை பார்த்து ரசிகர்கள் திட்டினாலும் நன்றாக என்ஜாய் செய்தும் வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்
ஜெனிபருக்கு பதிலாக இனிமே ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கப்போவதாக கூறியிரக்கின்றனர் .அதனை ப்ரோமோவிலும் நிரூபித்து இருக்கின்றனர் .இதனை பார்த்ததும் நெட்டிசன்கள் மீம்ஸ் களால் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டு வருகின்றனர் .சும்மாவே ஒருவர் சிக்கிவிட்டால் கலாய்க்கும் நெட்டிசன்கள் தற்போது இவருடைய என்ட்ரியை பார்த்து வேற லெவலில் கலாய்த்து வருகின்றனர் .அதில் இனி புஷ்பாவின் புருஷன் கோபி தானா என கலாய்த்து வருகின்றனர்.

புதிய புஷ்பா புருஷன்
ரேஷ்மா பசுபுலேட்டி சீரியல்களில் மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் நடித்து இருக்கிறார் .வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் இவர் நடித்து இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்து இருந்தது .அதுவும் அதில் வரும் புஷ்பா புருஷன் எனும் பெயரை இப்ப வரைக்கும் இவருடைய ரசிகர்கள் பல இடங்களில் பேசி வருகின்றனர் .அதுபோல தற்போதும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

கோபி படும் பாடு
சும்மாவே இந்த சீரியலில் கோபியை வைத்து செய்தும் நெட்டிசன்கள் இனி ஜெனிபர் கேரக்டரில் ரேஷ்மா வந்ததும் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை .ஆனாலும் இவர்கள் போடும் மீம்ஸ்களால் ரேஷ்மாவுக்கு நல்ல விளம்பரம் தான். எப்படியோ ரேஷ்மாவுக்கும் அதகளம் செய்ய ஒரு நல்ல களம் கிடைத்து விட்டது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications