Retro 6th day Box office collection: என்னதான் ட்ரோல் செய்தாலும் ரெட்ரோ வசூல் இத்தனை கோடி! வெளியான அறிவிப்பு
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் முடிவடைந்த நிலையில் அந்த திரைப்படம் இதுவரைக்கும் எவ்வளவு வசூல் பெற்றிருக்கிறது என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2d நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே கங்குவா திரைப்படம் இது போல தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் முதல் நாளில் அதிகமான விமர்சனங்களை சந்தித்ததால் முதல் நாள் வசூல் மட்டும் அதிகமாக இருந்தது அதை தொடர்ந்து அப்படியே சரிவடைந்துவிட்டது.

ரெட்ரோ விமர்சனம்
ஒரு சில வாரங்களிலேயே வசூல் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. ஆனால் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவிற்கு மீண்டும் ஒரு காம்பேக் கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. திரைப்படத்தின் கதையில் சூர்யா மாஸ் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார், அதே நேரத்தில் கதைக்கு அழுத்தமாகவும் நடித்திருக்கிறார் என்பது பலருடைய பாராட்டாக இருக்கிறது.
டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு போட்டி
இந்த திரைப்படம் வெளியான மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்தது. இதனால் ரெட்ரோ திரைப்படம் பெரிய அளவில் வசூல் செய்யாது என்ற ட்ரோல் எழுந்து வரும் நிலையில் இந்த திரைப்படம் 6 நாட்களில் செய்த வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக நிலவரத்தை ரெட்ரோ திரைப்படத்தை தயாரித்த 2d நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ரெட்ரோ ஆறாவது நாள் வசூல்
அதாவது 100 கோடி மைல் கல்லை கடந்து இருப்பதாகவும் தற்போது வரை இந்த திரைப்படம் உலக அளவில் 104 கோடி வசூல் பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது. ரெட்ரோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கனிமா பாடல் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்துவிட்டது. சோசியல் மீடியா பக்கங்களில் இந்த பாடல் தான் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் இந்த பாடலுக்கு பலர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ரெட்ரோ திரைப்பட நடிகர்கள்
அதுபோல இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சூர்யா குறித்து சில வருடங்கள் ஆகவே அதிகமாக ட்ரோல் எழுந்து வந்து கொண்டே இருக்கிறது. இது சூர்யாவிற்கு எதிராக திட்டமிட்டு நடக்கும் சதி என்று அவருடைய மனைவி நடிகை ஜோதிகாவும் பேசி இருக்கிறார். ஆரம்பத்தில் சூர்யா நடிக்க வரும்போது அவருக்கு ரொமான்ஸ் வராது, ஆக்ஷன் வராது என்று பலர் அவரை விமர்சித்தார்கள்.
விமர்சனங்கள்
ஆனால் அதற்கு பிறகு ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய திறமையாலும் நடிப்பாலும் முன்னேறி வந்து கொண்டிருந்தார். மக்கள் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார். நந்தா படத்தில் இவருடைய வித்தியாசமான நடிப்பு பலருடைய பாராட்டைப் பெற்றது. அதுபோல சிங்கம் சூர்யாவின் இன்னொரு முகத்தை காட்டியது. சூர்யா பற்றிய விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது ரெட்ரோ திரைப்படம் பெற்ற வசூல் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications