முந்தானையை காற்றில் பறக்கவிட்டு மொட்டை மாடியில் கலக்கிய ரித்விகா
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலரை தான் ரசிகர்கள் நன்றாகவே ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரிதான் பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் ஆக வந்த ரித்திகா ரசிகர்களின் மனதிலும் நல்ல இடத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறார்.
இவர் இந்த வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு சில படங்களின் வாய்ப்புகளும் இவருக்கு வந்திருக்கிறது. இருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் வரவில்லையாம்.
அதனால் பல நடிகைகள் கையில் எடுத்திருக்கும் அதே போட்டோ சூட்டை தற்போது இவரும் கையில் எடுத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிசி
இது வரைக்கும் இல்லாத அளவில் தற்போதுதான் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக போட்டோக்களை குவித்து வருகிறார் .இவர் எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இவர் எடுக்கும் போட்டோஸ் களும் அதை போஸ்ட் பண்ண விதமும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறதாம்.

சினிமாவில் கூட கிடைக்காத பெயர்
பல திரைப்படங்களில் நடித்து வாங்காத பெயரை சிலர் இன்ஸ்டாகிராமில் ஒரு சில போட்டோக்களை போட்டு அள்ளி விடுகிறார்கள். அதுவும் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து வருகிறார்கள் .அந்த மாதிரிதான் தற்போது இவருடைய போட்டோஸ் களுக்கும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறதாம் .

செம கெத்து
இவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாமே கம்பீரமான கதாபாத்திரமாக தான் இருக்கிறதாம். முதன் முதலில் இவர் அறிமுகமான பரதேசி திரைப்படத்தில் இவர் ஒரு சீனில் வந்தாலும் போதும் தமிழில் அறிமுகமாக வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இவருக்கு அவார்டு கிடைக்கும் என்று இவர் கூட நினைக்கவில்லை. பல நடிகைகளும் தங்களுடைய அழகால் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார்கள்.

கருப்பு அழகி
ஆனால் இவர் பல இடங்களில் கருப்பாக இருக்கிறார் என்று ஒதுக்கப்பட்ட பிறகும் பரதேசி படத்தின் மூலம்தான் இவரது கருப்பான அழகிற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கருப்பாக இருந்தால் நாம் அழகில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு முன்னுதாரணமாக இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது தான்.

கருப்புதான் ஒஸ்த்தி
எப்போதுமே கலராக இருந்தால் தான் அழகு என்று மக்களிடம் ஒரு மாயை உலவிக் கொண்டு வருகிறது .அதை உடைத்து அதுமட்டுமல்ல கருப்பும் அழகுதான் கருப்பு தான் நமது பாரம்பரிய கலர் என்று அனைவருக்கும் நிரூபித்துக் கொண்டிருப்பவர் .கலரில் இல்லை அழகு தன்னுடைய குணத்தில் தான் இருக்கிறது என்றுதான் இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார் என்று கூட இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

நேச்சுரல் பியூட்டி
எப்போதுமே அதிக மேக்கப் இல்லாமல் தன்னுடைய இயற்கையான அழகில் ஜொலிக்கும் இவர் தற்போது போட்டோஷூட்டில் களமிறங்கி இருக்கிறார். அதுவும் மொட்டைமாடியில் விதவிதமாக சேலை கட்டிக்கொண்டு போட்டோக்களாக எடுத்து தள்ளி இருக்கிறார் .அந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்று சுத்தி சுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications