ஆர்ஜே பாலாஜி குடும்பத்துல இவ்வளவு பிரச்சனையா? தந்தையால் ஏற்பட்ட காயம்.. அந்த படத்தை போலவே நிலைமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேடியா ஜாக்கியாகவும், தொகுப்பாளராகவும் இப்போது நடிகராகவும் தன்னுடைய பயணத்தை கடந்து வந்து கொண்டிருக்கும் ஆர் ஜே பாலாஜி அவருடைய குடும்பத்தை பற்றி முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதைக் கேட்டு எப்போதும் கலகலவென பேசிக் கொண்டிருக்கும் ஆர் ஜே பாலாஜியின் நிஜ வாழ்க்கையில் இத்தனை சோகங்களா என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஆர்ஜே பாலாஜி இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் தான் அவர் நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய நிஜ குடும்ப கதை, தான் நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இடம் பெறுவது போல தான் இருக்கிறது என்று வெளிப்படையாகவே அதில் ஆர் ஜே பாலாஜி பேசியிருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

rj balaji says interview in nothing to talk about my father

அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கடந்த வரம் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த நேரத்தில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கிய கோகுல்தான் இயக்கியிருக்கிறார். அதோடு அந்த திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக விஜய்யுடன் கோட் படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் அதிகமாக ஆர் ஜே பாலாஜி பற்றிய செய்திகள் தான் வெளியாகி இருக்கிறது.

அதுபோல ஆர்.ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதுவும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜியின் தந்தை சிறு வயதிலேயே தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியே போய் விட்டாராம். அதற்குப் பிறகு ஆர் ஜே பாலாஜியின் அம்மாவும் பெரிய அளவில் குடும்பத்தை கவனிக்கும் திறமை இல்லாமல் தான் இருந்தாராம்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இடம் பெற்றது போல ஓடிப் போன அப்பா, அக்கறை இல்லாத அம்மா, ஒரு தம்பி, மூன்று தங்கைகள் என்று ஆர்.ஜே பாலாஜியின் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்ததாம் அதுவும் ஆர்.ஜே பாலாஜி அப்பா வீட்டை விட்டு போன பிறகு தன்னுடைய அம்மாவால் ஒரே இடத்தில் இருக்க முடியாமல் சென்னையில் வளரும்போது 24 வீடுகளையும் 11 பள்ளிகளையும் மாற்றியதாக பேட்டி ஒன்றில் ஆர் ஜே பாலாஜி பேசி இருக்கிறார்.

அதுபோல அந்த நேரத்தில் தன்னுடைய தாத்தா மற்றும் பாட்டி தான் தங்களை அந்த நேரத்தில் பார்த்துக் கொண்டதாகவும் ஆர் ஜே பாலாஜி கூறி இருக்கிறார். அதற்கு பிறகு கல்லூரிக்கு போன பிறகுதான் தான் ஒரே இடத்தில் இருக்க முடிந்தது அதுவும் கல்லூரியிலும் பெரிய போராட்டமாக தான் இருந்தது, அந்த நேரத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்து தான் ரேடியோ மிர்ச்சியாக கோயம்புத்தூரில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறாராம்.

rj balaji says interview in nothing to talk about my father

அதற்குப் பிறகு ரேடியா மிர்ச்சியாக இருக்கும்போதே பல பிரச்சனைகளையும் பாலாஜி சந்தித்து இருக்கிறாராம். அதைத் தொடர்ந்து தான் ரேடியா துறையில் இருந்து தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். அதில் ஸ்டார் விஜய்யில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பாலாஜி தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அதுபோல ஜீ தமிழில் ஒய் திஸ் கொலவெறி என்ற நிகழ்ச்சியையும் பாலாஜி தான் தொகுத்து வழங்கியிருந்தாராம்.

அது போல ஜீ தமிழில் ஒரு சில நிகழ்ச்சிகளையும் 2013 மற்றும் 2014 ஆம் வருட வாக்கில் தொகுத்து வழங்கியிருக்கிறார். இப்போது சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். என்ன தான் பாலாஜி கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தாலும் அவருடைய நிஜ வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் பல சோகங்களை தாண்டி தான் வந்திருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+