Abhinay: கலைஞன் அனாதையா போகக்கூடாது! KPY பாலா உதவி பெருசு! அபிநய் மரணம் குறித்து ஆர்கே சுரேஷ் வருத்தம்
சென்னை: 'துள்ளுவதோ இளமை' படத்தின் நடிகர் அபிநய், கல்லீரல் செயலிழப்பால் இன்று அதிகாலை காலமான நிலையில், அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அபிநயின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநரும் நடிகருமான RK சுரேஷ், பழக்கவழக்கங்கள் குறித்தும், திரைக்கலைஞர்களின் கடமை குறித்தும் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

RK சுரேஷின் பேச்சு
நடிகர் அபிநயின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய RK சுரேஷ், தனதுத் திரையுலக நண்பனின் மறைவு குறித்து தனது துயரத்தை பதிவு செய்தார். "அபிநய் ரொம்ப நல்ல பையன். ஆனா, அவனுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு எதிர்பார்க்கல. அவனுடைய இறப்பை கேட்டதும் நான் உடனே வந்துட்டேன். ஒரு கலைஞன் தனியாக, அனாதையாக போக கூடாது! அவனுக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்னு சொல்லணும்" என்று உருகினார்.
மரியாதை தேவை
"அவன் உயிரோட இருக்கும்போதும் சரி, அவன் மறைந்த பிறகும் சரி, அவனுடைய நடிப்புக்கு நாம மரியாதை செலுத்தணும் என்பதற்காகத்தான் நான் வந்தேன்" என்று சுரேஷ் தெரிவித்தார். சின்ன நடிகரான அபிநய்க்குப் பெரிய நடிகர்கள் சிலர் அஞ்சலி செலுத்த வராதது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு RK சுரேஷ் தெளிவாகப் பதிலளித்தார்.
"இன்னும் சில நடிகர்கள் வரலையே என்றுப் பலரும் கேட்குறாங்க. அதற்கு அவங்களுக்கு இருக்கிற கமிட்மென்டைப் பொறுத்து அவங்க வருவாங்க. ஆனால், சின்ன நடிகர், பெரிய நடிகர் என்று பாரபட்சம் பார்க்காமல் இறப்புக்கு வரவேண்டும். திருமணத்திற்கு போறோமோ இல்லையோ, இந்த மாதிரி இறப்பு நேரத்தில் தான் நம்ம எல்லாரும் வந்து நிற்க வேண்டும். அப்போதான் இந்தக் கலைஞருக்கான ஒரு ஆறுதல் கிடைக்கும்" என்று அவர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தார்.
ரோபோ சங்கரையும் நினைவூட்டிய RK சுரேஷ்
சமீபகாலமாக திரையுலகில் உடல்நலப் பிரச்சனைகளால் நிகழும் மரணங்கள் குறித்து RK சுரேஷ் ஆழமானக் கருத்தைப் பதிவு செய்தார். "சினிமாவா இருந்தாலும் சரி, சாதாரண மனுஷங்களா இருந்தாலும் சரி, குடி மற்றும் போதைப் பொருள் பழக்கவழக்கங்கள் ரொம்பவும் மோசமானது. அது உடலை ரொம்பக் கெடுத்துடும்" என்று எச்சரித்தார்.
"என்னுடைய நண்பர்கள் சினிமாத் துறையில் இருப்பவர்கள் பலர் இப்போதெல்லாம் போதை பொருள் பயன்படுத்துவது கிடையாது. உடல் நலத்தில் அக்கறை இருப்பவர்கள் அதைச் செய்ய மாட்டாங்க. சமீபத்தில் ரோபோ சங்கருடைய இறப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் பெரிய விஷயம். ரோபோ சங்கருக்கு ஒரு பெரியத் திருப்பம் வந்தது. ஆனாலும், அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்னு தெரியல, இப்படி ஆயிடுச்சு" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
கேபிஒய் பாலா செய்வது பெரிய விஷயம்
அபிநயின் இறுதி சடங்குகளைத் தம்பி போல KPY பாலா ஏற்று நடத்துவது குறித்து பேசிய RK சுரேஷ், அவரை வெகுவாக பாராட்டினார். "அபிநயின் இறுதி வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பது KPY பாலா தான். அவன் ஒரு தம்பி போல நின்னு எல்லா வேலைகளையும் செஞ்சுட்டு இருக்கான். அவன் பலருக்கு உதவி செஞ்சிருக்கிறான். அதேபோல அபிநய்க்கும் பல உதவிகள் செஞ்சிருக்கிறான். இப்போது கூட இறுதிச் சடங்கின் பொறுப்பைத் தானே ஏற்றது ரொம்பப் பெரிய விஷயம் தான்" என்றுப் பாராட்டினார்.
சில நாட்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருந்த நிலையில் அபிநய் காலமானதும், அவர் வாழ்ந்த தனிமையான வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பழக்கவழக்கங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications