மதுரவாயலில் கலங்கிய சோனா.. அள்ளு விட்ருச்சு.. என்னை பார்த்து முறைக்கிறான்.. சென்னையில் பரபர பேட்டி
சென்னை: சென்னையிலுள்ள நடிகை சோனாவின் வீட்டில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பாக போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசாரும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?
நடிகை சோனா, சென்னை மதுரவாயலில் வசித்து வருகிறார். கிருஷ்ணா நகர், 28 வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று 2 பேர் உள்ளே நுழைந்து, சோனாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்துள்ளனர்.. வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள AC யூனிட்டையும் திருட முயன்றுள்ளனர்..

மர்மநபர்கள்: மர்மநபர்களை கண்டதும் சோனா வளர்க்கும் நாய் குரைத்துள்ளது.. இதனால், சத்தம் கேட்டு சோனா வெளியே வந்துள்ளார்.. அப்போது 2 மர்ம நபர்கள் சோனாவை பார்த்ததுமே அங்கிருந்து தப்ப முயன்றிருக்கிறார்கள்.
இதனால், சோனா கத்தி கூச்சலிடவும், 2 மர்மநபர்களும், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள். அதற்கு பிறகே சோனா போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகை சோனா: இதுகுறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு சோனா பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்தும் விவரித்துள்ளார். "நேற்று சாயங்காலம் 4 மணிக்கு என் வீட்டில் பெட்ரூமில் உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருந்தேன்.. ஜன்னலில் நாய் குரைக்கும் சத்தம் கேட்கவும் வெளியே எட்டிப்பார்த்தேன். ஒருத்தன் ஏசியை கழட்டி எடுத்துட்டு போக நின்னுட்டு இருக்கான்.. 2 கையிலும் வெச்சிட்டிருந்தான்.
ஆனால், வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அவனால் வீட்டுக்குள் நுழைய முடியல.. உடனே நான் கேட் திறக்க சாவியை எடுக்க போனேன்.. அதைப்பார்த்துட்டு, அவன் இவ்வளவு பெரிய கத்தியை வெளியே எடுத்து, என்னை பார்த்து முறைக்கிறான்.. அப்பதான் நான் ரொம்ப பயந்துட்டேன்.. இதை எதிர்வீட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். நான் அவங்களை உதவிக்கு கூப்பிட்டேன். ஆனால், அவங்க அசால்ட்டா கண்டுக்காம போயிட்டாங்க.
2 திருடர்கள்: வீட்டு வாசலில் இன்னொருத்தன் நின்னுட்டு இருந்தான்.. "அப்பறம் பார்த்துக்கலாம், வாடான்னு" அவன் கத்தி கூப்பிடவும் தான், என் முன்னாடி கத்தியோடு நின்னுட்டு இருந்தவன் கிளம்பி போனான். அவனுக்கு 27 வயசிருக்கும். சிவப்பு, வெள்ளை கலர் டிரஸ் போட்டிருந்தான்.. மாநிறமாக இருந்தான். என்னை பார்த்ததும் கூட அவன் தப்பி ஓடல. அப்படியே நின்னுட்டு இருந்தான்.
என் பட வேலைகளை துவங்கியதிலிருந்தே இப்படி நிறைய பிரச்சனைகள் வருது. அதுக்கும் இந்த திருட்டுக்கும் சம்பந்தம் இருக்குமா தெரியல. ஆனால், திருடன் ஏன் மதியானம் வரணும்? ஆளுங்களை பார்த்தா பயந்து ஓடுவாங்க, இவன் அப்படியே நிற்கிறானே ஏன்? முகத்தில் மாஸ்க் போட்டுட்டு வருவாங்க. இவன் மாஸ்க்கூட போடல.. நான் பயந்துட்டேன்.. நானெல்லாம் ரொம்ப தைரியமான ஆளுன்னு இத்தனை நாள் நெனச்சிட்டு இருந்தேன்.. நேத்து எனக்கு அள்ளு விட்ருச்சு.
சிசிடிவி காட்சி: கத்தியை அவன் வெளியே எடுத்ததுமே, நான் பயந்து ஓடினேன். கீழே விழுந்துட்டேன்.. முட்டியில் அடிபட்டுடுச்சு.. ஆனால், நான் புகார் தந்ததுமே, போலீசார் உடனே வேகமாக இறங்கி நடவடிக்கை எடுத்துட்டாங்க.. திருடனுங்க வந்த சிசிடிவி காட்சியையும் எடுத்திருக்காங்க" என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார் சோனா.












Click it and Unblock the Notifications