Robo Shankar: இனி அப்பாவின் சாம்பலை கூட பார்க்க முடியாது! இப்போ நிம்மதியா இருப்பாரு! இந்திரஜா உருக்கம்
சென்னை: சின்னத்திரை மேடைகள்ல தன்னோட கலக்கலான காமெடி மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைச் சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர் இப்போ நம்ம கூட இல்லன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது. மேடை கலைஞராக பயணத்தைத் தொடங்கி, பல திரைப்படங்களில் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தார் கடைசியில் கதாநாயகனாக நடிக்க வந்திருந்தாலும், அது பூர்த்தி ஆகாமலேயே இறைவனடி சேர்ந்துட்டாரு.

விஜய் டிவியின் அடையாளம்
ரோபோ சங்கருக்கு தன்னோட திறமையை வெளிக்காட்ட விஜய் டிவிதான் சரியான அடித்தளமா அமைஞ்சது. அவர் கிடைச்ச வாய்ப்புகளைச் சரியாப் பயன்படுத்திக்கிட்டு, காமெடியனா பயணிச்சு போகப் போக கதாநாயகனாவும் நடிக்கத் தொடங்கினார். ரோபோ சங்கர் கடைசியா 'சொட்டச் சொட்ட நனையுது' ங்கிற படத்துல நடிச்சிருந்தார்.
திடீர் மறைவு
மேலும் ஒரு புதிய படத்தோட படப்பிடிப்பின்போது திடீர்னு மயங்கி விழுந்து, சிகிச்சை பலன் இல்லாம உயிரிழந்தார். அவரோட மறைவு யாருக்குமே ஏத்துக்க முடியாததாப் போச்சு. எந்த மீடியாக இருந்தாலும் சரி அதில் கணீர் என்று குரலுடன் வழக்கமான கிண்டல் கலந்த பேச்சுடன் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துவிடுவார்.
ரோபோ சங்கர் மறைஞ்ச பிறகும், அவரோட குடும்பத்தார் அவர் வெளியூர்ல இருக்கார்ன்னு தங்களைத் தாமே ஏமாத்திக்கிட்டு, அவரோட நினைவுகளோடு வாழ்ந்துட்டு வர்றாங்க. அவருடைய மனைவி சமீபத்துல நடிகை அர்ச்சனாவுடன் சேர்ந்து புதிய நிகழ்ச்சி ஒன்றையும் ஆரம்பிச்சிருந்தார். அவர் ஏற்கனவே நடித்து வந்த தனம் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சமீபத்தில் தான் ரோபோ சங்கர் மனைவியின் பிறந்தநாளை அவருடைய மகள் கொண்டாடியிருந்தார். அப்போதும் என்னுடைய அப்பா இல்லாமல் அம்மா கொண்டாடும் பிறந்தநாள் என்று உருக்கமாக பகிர்ந்து இருந்தார்.
மகள் இந்திரஜாவின் நெகிழ்ச்சி பதிவு
இந்த நிலையில, ரோபோ சங்கரோட மகள் இந்திரஜா, தன்னோட அப்பாவோட அஸ்தியைக் கரைக்கும்போது ரொம்பவே உருக்கமான ஒரு பதிவைப் போட்டிருக்காங்க. "இதுக்கு அப்புறம் உங்க சாம்பலைக்கூடப் பார்க்க முடியாது.. உங்க ஆசைப்படி ஃப்ரீ பர்தா இருங்க அப்பா.. லாஸ்ட்டா பாய் பாய்" என்று தன்னோட இன்ஸ்டா பக்கத்துல உணர்ச்சிப் பொங்கப் பதிவிட்டிருக்காங்க.
இந்திரஜாவோட இந்தப் பதிவில் சமூக வலைதளங்கள்ல பலர் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கர் எப்போதும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்ச ஒருத்தர், அவருடைய இந்த இறுதி பிரிவு அவருடைய குடும்பத்துக்கு பெரிய வேதனையை கொடுத்திருக்கு. ரோபோ சங்கரின் நினைவுகள் நம்ம மனசுல எப்போதும் நிலைச்சிருக்கும்.












Click it and Unblock the Notifications