ராத்திரியில் கிறுக்கு போல் திரிந்தேன்.. 5 மாதமாக படுத்த படுக்கையாக இருந்தேன்.. ரோபோ சங்கர் உருக்கம்
சென்னை: நான் 5 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தேன் என்றும் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன் என்றும் நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்திருந்தார்.
டிவி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் காமெடியிலும் கலக்குவார், இவர் தீபாவளி, டூரிங் டாக்கீஸ், மாயா, சாகசம், மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் கொஞ்ச நாட்களாக லைம்லைட்டில் இருந்து வருகிறார். வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு கிளியை அவர் வளர்த்ததாக அவருக்கு வனத்துறையினர் ரூ 2 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த கிளியை பறிமுதலும் செய்தனர்.
நண்பர்கள் இலவசமாக கொடுத்த கிளிக்கு ரூ 2 லட்சம் அபராதம் செலுத்தினேன் என ரோபோ காமெடியாக கூறியிருந்தார். அடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் என்றால் அது அவரது உடல் மெலிந்த சம்பவம்தான். உடல் குண்டாக இருந்தாலும் நடனம் ஆடி குண்டாக இருந்தாலும் ஆர்வம் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை நிரூபித்திருந்தார்.
அப்படிப்பட்டவர் உடனே சர்ரென எடை குறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ரோபோவுக்கு மஞ்சள் காமாலை வந்து அதனால் உடல் மெலிந்துவிட்டதாக மனைவி பிரியங்கா நீண்ட நாட்கள் கழித்து ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல் துறை சார்பில் தனியார் கல்லூரி ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் ரோபோ கூறுகையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு 5 மாதங்கள் படுத்த படுக்கையாகவே இருந்தேன். மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த கெட்ட பழக்கவழக்கங்கள்தான். கெட்ட பழக்கம் இல்லாமல் இருக்கவே முடியாது. நடுராத்திரியெல்லாம் எழுந்து கிறுக்கு போல் திரிய தொடங்கினேன்.
என்னுடைய ரத்தத்தில் மஞ்சள் காமாலையின் பாதிப்பு இருந்தது, கெட்ட பழக்கவழக்கங்களால் என்னுடைய உறுப்புகள் பாதிக்கப்பட்டது. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்தேன், அறிவுரை என நினைத்திருப்பீர்கள். நான் இப்போது அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறேன் என்றும் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications