சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டேன்.. அந்த நேரத்தில் தனுஷ் செய்த விஷயம்.. பேசும்போதே கண் கலங்கிய ரோபோ சங்கர்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் பிரபலமானார். அதற்கு பிறகு வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்போது கதாநாயகனாக மாறி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் தான் கஷ்டப்படும் போது நடிகர் தனுஷ் தனக்கு செய்த உதவிகள் குறித்து கண்கலங்க பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஒரு சில நடிகர்களுக்கு திறமையும் உழைப்பும் இருந்தாலும் அதற்கான சரியான அங்கீகாரம் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தான் கிடைக்கிறது. அது போல தான் நடிகர் ரோபோ சங்கரும் ஆரம்பத்தில் எப்படியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று மிமிக்ரி ஆர்டிஸ்டாக பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

ரோபோ சங்கரின் ஆரம்பம்
அந்த நிகழ்ச்சியில் ரோபோ போல உடம்பெல்லாம் பெயிண்ட் பூசிக்கொண்டு இவர் பலருடைய குரலில் பேசி இருப்பார். இவருடைய மிமிக்கிரி திறமை மற்றும் இவருடைய நடிப்பு திறமை அந்த நிகழ்ச்சியில் பலராலும் பாராட்டப்பட்டது. அதற்குப் பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியிருந்தார். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் உடன் சில திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். அதிலும் மாரி திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
ரோபோ சங்கர் மகள் திருமணம்
அதைத் தொடர்ந்து சினிமாவில் பல கதாநாயகர்களுடன் நடிக்க தொடங்கிவிட்டார். இப்போது ரோபோ சங்கர் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல அவருடைய பர்சனல் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட சில வருடங்களில் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது. ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் பிகில் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
இந்திரஜாவின் குழந்தை
அந்த திரைப்படத்தில் விஜய் உடன் விளையாட்டு வீராங்கனையாக நடித்து இருந்தார். பிகில் திரைப்படத்தில் ஹைப் ஏத்தும் கேரக்டரில் இவருடைய நடிப்பு இருந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் இந்திரஜா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அவருடைய உறவினரான கார்த்திக் என்பவருடன் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் தான் இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

ரோபோ சங்கர் புகைப்படம்
அதுபோல சில வருடங்களுக்கு முன்பு வெளியான ரோபோ சங்கரின் புகைப்படம் ஒன்று இணைத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அந்த புகைப்படத்தில் ரோபோ சங்கர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்து இருந்தார். அப்போது இனி ரோபோ சங்கரின் நிலைமை அவ்வளவுதான் என்று எல்லாம் பலர் பேசி வந்தனர் ஆனால் சில மாதங்களில் ரோபோ சங்கர் பழைய நிலைக்கு மாறிவிட்டார்.
தனுஷ் செய்த உதவி
தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் தனக்காக உதவியவர்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் நடிகர் தனுஷ் பற்றி அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். தனுஷ் நான் கஷ்டத்தில் இருந்த போது எனக்கு மனதளவிலும், சக மனிதராகவும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ் தான். கொரோனா காலகட்டத்தில் நானும் என்னுடைய குடும்பமும் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். அப்போது எனக்கு பணரீதியாக மிகப்பெரிய உதவியை தனுஷ் செய்தார் என்று ரோபோ சங்கர் கூறியிருக்கிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications