பச்சிலை வைத்தியம் எடுத்த ரோபோ சங்கர்? அலுமினிய பெயிண்ட்டை உடலில் ஊற்றி.. ஈரலை காவு வாங்கும் காரணிகள்
சென்னை: ரோபோ சங்கரின் மறைவானது மிகப்பெரிய எச்சரிக்கை மணியை அடித்துவிட்டு போயிருக்கிறது.. உடல்நலம் சார்ந்த விஷயங்களில் பெருத்த கவனத்தை அனைவருமே செலுத்த வேண்டும் என்று டாக்டர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, மஞ்சள் நிறம், சோர்வு, வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஈரல் பாதிப்புகளை சுட்டிக்காட்டி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "மஞ்சள் காமாலை வந்தாலே ஈரல் கெட்டுப்போய்விட்டதாக அர்த்தம்.. அதற்கு பிறகும் ரோபோ சங்கர் குடித்ததாக சொல்கிறார்கள்.. குடியில்லாதவர்களுக்கே ஈரல் கெட்டுப்போய்விட்டால் ஆங்கில மருத்துவத்தில் மிகவும் கடினம்..

சின்ன துண்டு லிவர்
இந்திய மருத்துவத்தில் மருந்துகள் இருந்தாலும், பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை.. நம்முடைய மனித உடம்பில் எந்த உறுப்பு கெட்டு போய்விட்டாலும், அந்த நோய் பற்றின உண்மையை உறுதியாக சொல்லலாம்.. ஆனால் லிவர் கெட்டுப்போய்விட்டால் மட்டும் எந்த மருத்துவர்களும், உறுதியாக சொல்ல மாட்டார்கள்..
பெரும்பாலும் ஈரல் கெடாது.. Live என்றாலே உயிருடன் இருப்பது என்று அர்த்தம்.. Liver என்பது சாகவே சாகாது.. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த உறுப்பாகும்.. ஒரு சின்ன துண்டு ஈரல் ஒட்டிக் கொண்டிருந்தாலும், அது மறுபடியும் வளர்ந்து உயிரை காப்பாற்றக்கூடிய சக்தி படைத்தது.. அது கெட்டுப்போனால் உயிரை காப்பாற்றவே முடியாது..
அதை போய் கெடுத்துக் கொண்டு, கெட்ட பிறகும் விடுவேனா என்பது போல விஷத்தை குடித்து கொண்டுமிருந்தால் என்ன செய்வது?
ரோபோ சங்கர் - ஈரல் நோய்
ஒருவேளை ஈரல் கெட்டுப்போன பிறகும் ரோபோ சங்கர் மது அருந்தியிருந்தால், அல்லது யார் சொல்லியும் அவர்கள் பேச்சை கேட்காமல் இருந்தால், அந்த மரணத்துக்கு அவர் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.. எனவே அவர் உடல்நிலை விஷயத்தில் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்.
எப்படி பார்த்தாலும் கெட்டுப்போன ஈரலை சரிப்படுத்த, எந்த டாக்டர்களாலும் உறுதி தர முடியாது. இன்றுவரை ஆங்கில மருத்துவத்தில் ஈரல் உறுப்புக்கான மருந்து சரியாக கிடையாது.. இதனால் ஈரல் பிரச்சனைக்கான சிகிச்சை வெற்றி பெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.. சித்த மருத்துவத்தில் உறுதியாக காப்பாற்ற முடியும் என்று சொல்கிறார்கள்.. ஆனால், காப்பாற்றுகிறார்களா என்று தெரியாது. ஆனால், ஈரல் கெட்டுப்போன பிறகும், மது குடித்தால் அது தற்கொலைக்கு சமம்.
பச்சிலை வைத்தியம்
சேலம் பச்சிலை மருத்துவத்தை ரோபோ சங்கர் தொடர்ந்ததாக கூறுகிறார்கள்.. சென்னை திருவல்லிக்கேனியில் யுனானி டாக்டர் பிரபலமானவர்.. அவர் இதுபோன்ற மருந்துகளுக்கு கஷாயம் போல தருவார்..
அந்த கசப்பு மருந்தை 2 முறை தருவார்கள்.. அதை சாப்பிட்டாலே நோய் குணமாகிவிடும்.. இன்று அந்த மருத்துவம் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. இவர்கள் எல்லாம் தைரியப்படுத்தி, நோயை குணப்படுத்த கியாரண்டியும் தந்தார்கள்.. இன்று எங்கிருக்கிறார்கள்? அந்த மருத்துவமனை இன்று இருக்கிறதா? தெரியவில்லை.
அலுமினிய பெயிண்ட்டை உடலில் பூசிதான் ரோபோ சங்கர் ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகளை செய்து வந்தார்..
அப்போது அந்த பெயிண்டை மண்ணெண்ணையை வைத்துதான் உடம்பிலிருந்து நீக்க முடியும்.. இதெல்லாம்கூட, ரோபோ சங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது நண்பர் இளவரசர் கூறியிருக்கிறார்..
அனுமானங்களும், ஆதாரங்களும்
இது ஓரளவு ஏற்கக்கூடியதே.. காரணம் மெர்க்குரி போன்ற வேடங்களை போடும்போது, அலுமினிய சாயத்தை உடலில் பூசக்கூடும்.. புலி வேஷம் போடுவதற்கும், கதகளி ஆடும்போதும், உடலில் பெயிண்ட் அடிக்க நேரிடும்.. எனவே, கெரசனை கொண்டுதான், அந்த பெயிண்டை நீக்க வேண்டியிருக்கிறது.. இதனால் உடலில் பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும். எனினும் இதெல்லாம் அனுமானங்களே தவிர, உறுதியானவை கிடையாது, இதற்கான ஆதாரங்களும் கிடையாது.
அதேபோல ஃபேட்டி லிவர், சிரோஸிஸ் லிவர் போன்றவைகளும் ஈரலை பாதிப்பதற்கான காரணங்களாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications