மீண்டும் எங்க வீட்டில் விசேஷம்..ஆனால், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா நெகிழ்ச்சி பதிவு.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவின் மகனுக்கு நேற்று தான் நடிகர் கமல்ஹாசன் நட்சத்திரன் என்ற பெயர் வைத்திருந்தார். அதை தொடர்ந்து இன்று தங்களுடைய வீட்டில் அடுத்த கொண்டாட்டம் என இந்திரஜா வெளியிட்ட பதிவு இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பலருக்கும் ரோபோ சங்கர் தெரிந்தவர் தான். சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளித்திரையிலும் முன்னணி கதாநாயகர்கள் பலரோடும் குணசித்திர வேடங்களிலும், காமெடியனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் இருவருமே சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

Robo Shankar indraja shankar

பிகில் பாண்டியம்மா

அதிலும் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் .

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

ரோபோ சங்கர் குடும்ப செய்தி இணையத்தில் அடிக்கடி வலம் வந்து கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கும் முன்பு ரோபோ சங்கரின் உடல் எடை குறைந்த புகைப்படம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐயோ ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு என்று பலரும் அதிர்ச்சியாகும் வகையில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார்.

மீண்டும் பழைய நிலையில்

அப்போது கூட இனி ரோபோ சங்கரின் நிலைமை அவ்வளவுதான் என்று சில youtube சேனல்களில் சிலர் தவறாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் தன்னுடைய குடும்பத்தினரின் அன்பு மற்றும் அரவணைப்பு காரணமாக ரோபோ சங்கர் மீண்டும் பழைய நிலைக்கு வந்திருக்கிறார். அதுபோல ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

Robo Shankar indraja shankar

மகிழ்ச்சி செய்தி

அப்போது திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது சில மாதங்களிலேயே இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்திருந்தனர்.

முதல் திருமண நாள்

பிறகு இந்திரஜாவின் வளைகாப்பு பங்க்ஷன் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதுபோல சில மாதங்களுக்கு முன்பு இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தான் நடிகர் கமல்ஹாசன் நட்சத்திரன் என்ற பெயர் சூட்டி இருந்தார். இந்த நிலையில் இன்று இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதி தங்களுடைய முதல் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

சென்டிமென்ட் வரிகள்

கார்த்திக்கோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த இந்திரஜா அந்த பதிவில், முதலாவது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா... இந்த திருமண நாளில் நீங்கள் கொடுத்த மிகப்பெரிய பரிசுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார். அதோடு தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்ற "உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளைக்காரி புடிப்பா.. இந்த சிறுக்கிய ஏழை கிறுக்கிய எதுக்காக புடிச்ச" என்ற பாடல் வரிகளை பகிர்ந்து இருக்கிறார்.

பாட்டுக்கு பாட்டு

அதற்கு கார்த்திக் அந்த பதிவிற்கு "லவ் யூ மை டியர் பாப்பா.. பொண்டாட்டி. எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி" என்று அவரும் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்வரிகளை பதிலாக கொடுத்திருக்கிறார். இந்த பதிவுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+