என் வாழ்வில் எத்தனை துன்பங்கள்.! உருக்கமாக பதிவு வெளியிட்ட ரோபோ சங்கர் மனைவி.. குவியும் கருத்துக்கள்
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மனைவியான பிரியங்கா சங்கர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய கணவரோடு சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் எடுத்த வீடியோவை பிரியங்கா சங்கர் பகிர்ந்து இருக்கிறார்.
அழகிய குடும்பம்: தமிழ் சினிமாவில் காமெடி கலைஞனாகவும் துணை கதாநாயகனாகவும் நடித்து பிரபலமடைந்து வரும் நடிகர் ரோபோ சங்கரின் மனைவிதான் பிரியங்கா சங்கர். ஒரு நடன கலைஞராகவும் இருந்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு தான் ரோபோ சங்கர் மற்றும் பிரியங்காவிற்கு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவர் பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கர் குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான தகவல்களும், செய்திகளும் பரவி வருகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரச்சனை: சில மாதங்களுக்கு முன்பு கிப்டாக கிடைத்த கிளியை வளர்த்து வந்ததற்காக ஒரு ஹோம் டூர் வீடியோவால் ரோபோ சங்கர் தம்பதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மாதிரி கிளி வளர்க்கக்கூடாது என்பது தெரியாமல் வளர்த்து வந்த நிலையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அபராத தொகை அதிகமாக இருந்ததாக பலர் கருத்து கூறி வந்தனர். அது மட்டும் அல்லாமல் பலருக்கும் இவர்களுடைய பிரச்சனை விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

வெளியான புகைப்படம்: அந்த பிரச்சனை கொஞ்சம் குறைவதற்கு அடுத்த பிரச்சனையாக ரோபோ சங்கரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் ரொம்ப சங்கர் திடீரென்று உடல் எடை விரைவாக குறைத்து அந்த புகைப்படத்தில் இருக்கிறார். அதை குறித்து பல்வேறு கருத்துகளும், கேள்விகளும் வலம் வந்து கொண்டிருந்தது. ரோபோ சங்கருக்கு உடல்நல பிரச்சனை காரணமா? என்றெல்லாம் பலரும் கூறி வந்த நிலையில் அவருடைய உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் திரைப்படத்திற்காக உடம்பை குறைத்திருக்கிறார் என்று அவருடைய மனைவி விளக்கம் கொடுத்து இருந்தார்.

மனைவியின் பதிவு: ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா சங்கர் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரோபோ சங்கரோடு மலேசியாவில் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து, தோள் சாய தோழனும் மார்பில் சாய்க்க காதலனும் இரண்டும் சேர்ந்த ஒரு ஆண் கணவனாக கிடைக்கப் பெறும் பெண் பாக்கியசாலி தான். என் வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வேன். நீ என் அருகில் துணையாக இருந்தால் என்று காதல் தத்துவங்களை பதிவாக வெளியிட்டு தற்போது அது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications