Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Robo Shankar: ரோபோ சங்கர் வீட்டுக்கு கையில் கவருடன் வந்த விஜய பிரபாகரன்! கதறி அழுத இந்திரஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Robo Shankar funeral) சிரிப்பை மட்டுமே தனது அடையாளம் என்று வாழ்ந்த நடிகர் ரோபோ சங்கர், தனது 46வது வயதில் காலமானார். அவரது மறைவு, தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் மகன்கள், அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு கண்ணீர் சிந்திய நிகழ்வு, பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Robo Shankar Indraja Shankar

தந்தையின் வழியில் மகன்கள்

ரோபோ சங்கரின் மறைவுச் செய்தி கேட்டதும், நடிகர் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜய பிரபாகரன், தனது கையில் ஒரு வெள்ளை கவரை வைத்திருந்தார், அது விஜயகாந்தின் தாராள மனப்பான்மையை நினைவுபடுத்தியது. தந்தையைப் போலவே மகனும், துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு நேரடியாக உதவ வந்ததை, பலர் பாராட்டி வருகின்றனர்.

விஜய பிரபாகரனைப் பார்த்ததும், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், மகள் இந்திரஜாவும் கதறி அழுதனர். அந்த உருக்கமான காட்சியைப் பார்த்த விஜய பிரபாகரனும் கண்கலங்கி அழுதுவிட்டார். சண்முக பாண்டியன், பிரியங்கா மற்றும் இந்திரஜாவுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், "ரோபோ சங்கர் அண்ணன் இன்று இல்லை என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் அப்பாவைப் போலவே பேசிப் பிரபலமானார். அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த நடிகர். அப்பாவின் கடைசி காலத்தில் கூட இவர் நேரில் வந்து பார்த்துப் பேசியிருந்தார். இன்று அவர் இல்லை. அவருடைய குடும்பத்தினர் உடைந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் எல்லாரும் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

Robo Shankar Indraja Shankar

கண்ணீர் வரவழைத்த ரோபோ சங்கர்

ரோபோ சங்கர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, விஜயகாந்த் பற்றிப் பேசிய ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகிறது. "விஜயகாந்த் சார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் நான் அவருடைய வீட்டிற்குப் போயிருந்தேன். அப்போது பிரேமலதா அண்ணி, உங்க மாதிரியே பேசுவாரில்ல ரோபோ சங்கர்... அவர் வந்திருக்காருனு சொன்னாங்க. உடனே பக்கத்தில் போய் நின்றேன். விஜயகாந்த் அய்யா என் கையைப் பிடித்துக்கொண்டு பேசு பேசு என்றார். அப்போ நான் அவர் போலப் பேசிக் காட்டினேன். அவருடைய கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வந்தது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

ரோபோ சங்கர் மேலும், "விஜயகாந்த் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அவர் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால், இன்று அவரும் அதே பாதையில் பயணித்துள்ளார். ஒரு கலைஞன் தனது ஆதர்ச நாயகனின் மறைவுக்கு வருந்திப் பேசி சில மாதங்களிலேயே அதே துயர நிலைக்கு ஆளானது அனைவரையும் வருத்தம் அடைய செய்து இருக்கிறது.

ரோபோ சங்கரின் அண்ணன் கண்ணீர்

ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி, அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவரது அண்ணன் சிவகங்கை சிவா பேசும்போது, "ரோபோ சங்கர் பாடி பில்டிங் பண்ணிட்டு இருந்தான். முதல் முறையாக இரண்டு ஜெஸ்ட்டையும் (நெஞ்சு பகுதி) மேலே கீழே தூக்கிக் காட்டிய ஒரே பாடி பில்டர் அவன் தான். மேடை நிகழ்ச்சிகளுக்காக அலுமினியம் பெயிண்ட் பூசிக்கொண்டு போனதுதான் அவனுடைய இந்த நிலைக்குக் காரணமாகிவிட்டது எனத் தோன்றுகிறது" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.

பாடல் ஆசிரியர் சினேகன் பேசும்போது, "ரோபோ சங்கர் ஏறிய முதல் மேடையிலிருந்து அவருடன் நான் இருந்திருக்கிறேன். தனது உடல்நிலையை சரியாக கவனிக்கவில்லை எனப் பல நண்பர்கள் அவரிடம் கவலைப்பட்டோம். ஆனால், மனம் சொன்னதை மட்டுமே கேட்டுச் செயல்பட்டார்" என்று வருத்தத்துடன் கூறினார்.

ரோபோ சங்கரின் இந்த திடீர் மறைவு, அவரது வாழ்க்கையின் இறுதிப் பக்கத்தில் வலிகளையும், துயரத்தையும் மட்டுமே தந்திருந்தாலும், அவரது நினைவுகள் என்றும் சிரிப்பைத் தந்துகொண்டே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+