இந்திரஜா ரிசப்ஷன்.. கமல்ஹாசன் காலில் விழுந்த ரோபோ சங்கர்! இப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமணம் சில தினங்களுக்கு முடிவடைந்து இருந்த நிலையில் ரிஷப்ஷன் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பல திறை பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நடிகர் கமல்ஹாசனுக்கு ரோபோ சங்கர் பெரிய அளவில் வரவேற்பு வைத்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் தன்னுடைய மகள் திருமணத்திற்காக வந்த கமல்ஹாசனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து அவருடைய காலில் குடும்பத்தோடு விழுந்து ஆசீர்வாதம் வாங்கி மகிழ்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்தை திறந்தாலே இப்போது அதிகமாக ரோபோ சங்கர் வீட்டு பங்க்ஷன் வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் தான் இருக்கிறது. கடந்த வாரத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே திருமண களை வீட்டில் களைகட்ட தொடங்கிவிட்டது. அதுபோல ஒரு வாரத்திற்கு முன்பே ஹல்தி, மெஹந்தி போன்ற பல பங்க்ஷன்களை வைத்து ரோபோ சங்கர் அசத்தி இருந்தார். தன்னுடைய மகள் திருமணத்தை மதுரையில் முடித்திருந்த ரோபோ சங்கர் ஊருக்கே கிடா விருந்து வைத்து அனைவரையும் அது பற்றியே பேச வைத்திருந்தார்.
அதே நேரத்தில் ரோபோ சங்கர் வீட்டு திருமண புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்த சிலர் நெகட்டிவ் ஆகவும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அது குறித்தும் ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மகள், மனைவி, மருமகன் என எல்லோரும் குடும்பமாக சில வீடியோக்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் ரோபோ சங்கரின் மகளின் ரிசப்ஷன் சென்னையில் நடைபெற்று இருக்கிறது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ரோபோ சங்கர் தன்னுடைய மகள் திருமணத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பிரபலங்கள் பலருக்கும் இன்விடேஷன் கொடுத்திருந்தார். அதிலும் மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து இன்விடேஷன் கொடுத்து அவர்களோடு புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் ரோபோ சங்கர் வீட்டு பங்க்ஷனுக்காக நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிசியான நேரத்திலும் வந்து இருக்கிறார்.
நடிகர் ரோபோ சங்கர் நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் என்று பல மேடைகளில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தன் வீட்டிற்கு வந்த கமல்ஹாசனுக்கு ஆள் உயர ரோஜாப்பூ மாலை போட்டு வரவேற்று இருக்கிறார். கமல்ஹாசன் காலில் பொண்ணு மாப்பிள்ளை மட்டுமல்லாமல் ரோபோ சங்கர், அவருடைய மனைவி என ஒட்டு மொத்த குடும்பமும் ஆசீர்வாதம் வங்கி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications