ரோபோ சங்கர் இல்லாத முதல் பிறந்தநாளை கண்ணீருடன் கொண்டாடிய பிரியங்கா! மகளின் பதிவு! குவியும் வாழ்த்து
சென்னை: சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் காமெடியால நம்மளை எல்லாம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர் ரோபோ சங்கர். மேடைக் கலைஞரா ஆரம்பிச்சு, காமெடியில கலக்கி, கடைசியா ஹீரோவாக்கூட வந்தவர். ஆனா, எதிர்பாராத விதமா அவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சட்டுன்னு நம்மள விட்டுப் போயிட்டார். அவர் மறைஞ்சதை இன்னமும் பலரால ஏத்துக்கவே முடியலை. இன்னும் இருந்திருக்கலாம்னு ரசிகர்கள் உருகி பேசிக்கிட்டு இருக்காங்க.
ஆனா, அவரோடக் குடும்பம்தான் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு. ரோபோ சங்கர் மறைவுக்கு பிறகு, அவருடைய மனைவி பிரியங்கா சங்கர் மீதுக் கடுமையான விமர்சனங்கள் வர ஆரம்பிச்சுது. ஆனா, அத்தனையையும் அவர் தாங்கிக்கிட்டார். இப்போ வரைக்கும் அவங்க, "ரோபோ சங்கர் எங்கேயும் போகலை. அவர் வெளிநாட்டுல ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்காரு!"ன்னு மனசை தேத்திக்கிட்டுத் தங்களுடைய வாழ்க்கையை தனியா நகர்த்திக்கிட்டு இருக்காங்க. இது ஒரு பெண்ணுக்கு கிடைச்ச பெரிய வலி!

வேதனைகளை தாண்டிய பயணம்
சமீபத்துல அர்ச்சனாவுடன் சேர்ந்து சமையல் நிகழ்ச்சி ஒன்னுல பிரியங்கா சங்கர் கலந்துக்கிட்டாங்க. அப்போதும் நிறைய விமர்சனங்கள் வந்தது. ஆனா, தன்னோட வேதனைகளை கடந்து, அவர் அடுத்த கட்டத்துக்குப் போறாங்கன்னு நினைச்சு பலரும் வாழ்த்துச் சொன்னதுதான் நிஜமான அன்பு.
பிறந்தநாள்
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பிரியங்கா சங்கர் தன்னோட பிறந்தநாளைக் கொண்டாடி இருக்காங்க. ஆனா, இது சாதாரணப் பிறந்தநாள் இல்ல... ரோபோ சங்கர் மறைஞ்ச பிறகு அவர் கொண்டாடுற முதல் பிறந்தநாள். பிரியங்கா சங்கர் தன்னோடப் பிறந்தநாளை விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் சிலரோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்காங்க. அதுமட்டுமில்லாம, அவரோட மகள், பேரன், மருமகன்ன்னு குடும்பமே இந்தப் புகைப்படத்துல இருக்கு!

மகளின் உருக்கம்
இந்த நேரத்துல, ரோபோ சங்கர் மகள் இந்திரஜா ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். "இது ரோபோ சங்கர் மறைந்த பிறகு அம்மா கொண்டாடும் முதல் பிறந்தநாள்"ன்னு அந்தப் பதிவில அவர் சொல்லியிருக்காங்க. சின்னத்திரையில இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளி தெளிச்ச ஒருக் கலைஞனோடக் குடும்பம், இன்னைக்கு இந்த சோகமான உண்மைக்குள்ளேயே, சிரிச்சு வாழ முயற்சி பண்றதைப் பார்த்தா, நம்ம மனசுக்கும் கஷ்டமாத்தான் இருக்கு என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ரோபோ சங்கர் எல்லோர் மனசுலயும் கண்டிப்பா உயிரோடுதான் இருக்கார்! பிரியங்கா சங்கருக்கும், குடும்பத்துக்கும் வாழ்த்துகளும், துணையும் எப்போதும் இருக்கும் என்று பலர் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications