எனக்கும் சீக்கிரமா டிக்கெட் போட்டு அனுப்பு சங்கரம்மா.. முடியல! மனம் நொந்து போஸ்ட் போட்ட ரோபோ சங்கர் மனைவி!
சென்னை: ரோபோ சங்கர் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அதற்கு பிறகு அவருடைய மனைவி தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் அவருக்கு பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரை வெள்ளித்திரையில் காமெடியனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ரோபோ சங்கரை அவ்வளவு சீக்கிரமாக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அடி மட்டத்திலிருந்து தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களோடு ரோபோ சங்கர் நடித்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக அவர் ஒரு திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அவருடைய பழக்க வழக்கம் காரணமாக கடந்த சிலவருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது கூட அதிலிருந்து மீண்டு வந்து விட்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் காலமாகிவிட்டார்.
ரோபோ சங்கர் பிரியங்கா என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து இருந்தார். இந்த காதலுக்கு இரண்டு குடும்பத்திலும் அந்த நேரத்தில் அதிகமாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி தங்களுடைய திருமண வாழ்க்கையை தொடங்கிய ரோபோ சங்கர், பிரியங்கா தம்பதிக்கு இந்திரஜா என்ற ஒரே மகள் இருக்கிறார். அவரும் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதுபோல தன்னுடைய தந்தையோடு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தார். ஆனால் ரோபோ சங்கர் மறைவுக்கு பிறகு அவருடைய குடும்பம் இப்போது கஷ்டத்தில் தான் இருக்கின்றனர். குடும்பத்தில் தூணாக இருந்த ஒரு நபர் திடீரென இல்லை என்று ஆனபோது அந்த குடும்பமே உடைந்து போய் தான் இருக்கிறது. ஆனாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.
அதனால் ரோபோ சங்கர் இறப்புக்கு பிறகு பிரியங்கா தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தனம் சீரியலில் அவர் ஆரம்பத்தில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று ரோபோ சங்கர் மற்றும் பிரியங்காவின் திருமண நாள் என்பதால் ரோபோ சங்கரோடு எடுத்த வீடியோ ஒன்றை பிரியங்கா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.
அந்த பதிவில், 24 ஆண்டுகள் மட்டுமல்ல 200 ஆண்டுகளும் நம் திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருப்போம் சங்கரம்மா.. என்ன, இத்தனை வருடம் நீ பக்கத்துல இருப்ப... இந்த வருடம் நீ வேலை விஷயமா போயிருக்க. எங்க இருந்தாலும் என் மனசும் உன் மனசும் ஒன்னாதான் இருக்கும்மா.. இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த உனக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சங்கரம்மா.. ரொம்ப மிஸ் பண்றேன் டா உன்ன. சீக்கிரமா வந்துடு..
உனக்காக நான் காத்துட்டு இருக்கிறேன்.. இல்லையென்றால் எனக்கு டிக்கெட் போட்டு அனுப்பு நான் வந்துட்டுறேன்ம்மா... லவ் யூ சோ மச் சங்கர அம்மா என்று பிரியங்கா அந்த பதிவிற்கு கேப்டன் கொடுத்து இருக்கிறார். இதற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ரோபோ சங்கரின் அஸ்தியை காசியில் கரைத்து விட்டு அவருடைய குடும்பத்தினர் உருக்கமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து இப்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தன்னுடைய தந்தை பெயரில் ரோபோ ஈவண்ட் அண்ட் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications