ரோபோ சங்கர் மறைந்த பிறகு வீட்டில் நடந்த சம்பவம்! தாலி விஷயத்தில் பிரியங்கா எடுத்த முடிவு! பிரபலம் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் தனது சளைக்காத முயற்சி மற்றும் எதார்த்தமான நகைச்சுவையால் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் நடிகர் ரோபோ சங்கர். கூட்டத்தில் ஒருவராக வாய்ப்பு தேடிய இவரது விடாமுயற்சிதான், விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சிக்கு அடித்தளமானது. மிமிக்ரி மற்றும் நகைச்சுவைத் திறமையால் வெள்ளித்திரையில் தனக்கான வாய்ப்புகளைக் குவித்து, விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.
ஆனால், ரோபோ சங்கருக்கு இருந்த சில பழக்கவழக்கங்களால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. கடந்த சில வருடங்களாகவே உடல்நலப் போராட்டங்களைச் சந்தித்துவந்த அவர், மஞ்சள் காமாலை நோயின் பாதிப்புக்கு ஆளானார். இரண்டு வருடங்களுக்கு முன் சாவின் விளிம்பிற்கே சென்ற அவரை, மகள் இந்திரஜாவும், மனைவி பிரியங்காவும் தான் மீட்டுக்கொண்டு வந்தனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கம்
மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ரோபோ சங்கருக்கு கடந்த மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆரம்பத்தில் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், பின்னர் இவரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழந்து வருவதாகக் கூறப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் பலனின்றி, சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் செப்டம்பர் 18 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் எதிர்பாராத மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நாஞ்சில் விஜயன் உருக்கம்
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பற்றிய பல நெகிழ்ச்சியான தகவல்களைப் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், ரோபோ சங்கருக்கு மிகவும் நெருங்கிய குடும்ப நண்பரான நாஞ்சில் விஜயன் ஒரு பேட்டியில் கூறிய தகவல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரோபோ சங்கருக்கு அரசு வழங்கிய 'கலைமாமணி' விருதில் கொடுக்கப்பட்ட பதக்கத்தை, அவர் ஒரு செயினில் அணிந்து எப்போதும் அணிந்திருப்பாராம். ஆனால், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப கஷ்டம் காரணமாக, அந்தப் பதக்கத்தை ரூ. 3 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்திருக்கின்றனர்.
ரோபோ சங்கரின் மரணத்துக்குப் பின்னர்தான், இந்த விஷயம் அவரின் நண்பர்களுக்குத் தெரிய வந்துள்ளது. உடனடியாக, அவருடைய நண்பர்கள் அந்தப் பணத்தைக் கொடுத்து, அந்தச் செயினை மீட்டு ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இறுதியாக, நாஞ்சில் விஜயன் பகிர்ந்த அந்த உருக்கமான தகவல் இதுதான்: "அந்தச் செயின் தான் இனிமேல் என் தாலி. அதை எப்போதும் நான் கழுத்தை விட்டு கழட்ட மாட்டேன் என கூறி, தற்போது பிரியங்கா அக்கா அதைப் போட்டுள்ளார்" என்று அவர் கூறியுள்ளார். ரோபோ சங்கரின் கலை வாழ்வின் பெருமைமிகு அடையாளமாக இருந்த அந்தப் பதக்கத்தை, கணவனின் நினைவாகப் பிரியங்கா தாலியாக அணிந்திருக்கும் இந்தத் தகவல், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications