"உண்மை தெரியாமல் யாரையும் தப்பா பேசாதீங்க“..ரோபோ சங்கர் மகள் கோபத்தில் வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ரோபோ சங்கர் மகளான இந்திரஜா சங்கர் சமீபத்தில் தன்னுடைய தந்தையை பற்றி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சமீப காலமாக ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் இந்திரஜா பதிலடி கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது தனித்துவத்தால் பிரபலமடைந்த ரோபோ சங்கர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் இப்போ வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமாக இருந்து வருகிறார்.
ரோபோ சங்கர் மட்டுமில்லாமல் அவருடைய மகள், மனைவி இருவருமே சின்னத்திரையில் பிரபலமானவர்களாகத்தான் இருந்து வருகின்றனர். ரோபோ சங்கர் மகள் பல சீரியல்களில் ஹெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

அதோடு இல்லாமல் திரைப்படங்களிலும் முன்னணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவர் குலதெய்வ கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு எடுத்த தங்களுடைய குடும்ப போட்டோவை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவில் அவருடைய அருகில் இருந்த நபரை பார்த்து நீங்கள் இவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதற்கு எந்த பிகுவும் பண்ணாமல் இந்திரஜா, ஆமா அது என்னுடைய மாமா தான். நான் அவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். இன்னும் நாள் குறிக்கல. நாள் குறிச்சதும் கண்டிப்பா உங்க கிட்ட சொல்றேன் என்று கூறியிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

அது மட்டுமல்லாமல் சமீப காலமாகவே ரோபோ சங்கர் பற்றிய செய்திகள் சமூக வலைதளத்தில் அடிக்கடி அடிபட்டு கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு உடல் எடை குறைந்த ரோபோ சங்கரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி, அவருக்கு அப்படியா இருக்குமோ? இப்படியா இருக்குமோ? என்று ஆளாளுக்கு வதந்திகளையும் தவறான கருத்துக்களையும் பரப்பி வந்தனர்.

அது குறித்தும் இந்திரஜா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய அப்பாவின் புகைப்படம் வெளியிட்ட இந்திரஜா அந்த பதிவிற்கு, "ராஜா எப்போதும் ராஜா.. நீங்க எப்பவுமே ராஜா அப்பா" மேலும் ஒரு குட்டி கருத்து..." உண்மை தெரியாமல் ஒருவரை பற்றி தவறாக பேசாதீர்கள்" என பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications