தப்பா பேசாதீங்க..! அது ஒரு தவறான ரூமர்.. ரோபோ சங்கர் மகள் கல்யாணத்தில் மதுரை முத்து மனைவி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் கலக்கி கொண்டிருக்கும் ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா சங்கர் அவருடைய மாமன் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடைய திருமணத்தில் நடிகர் மதுரை முத்துவின் குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரை முத்து மனைவி அங்கு கண்கலங்க பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அப்போது மதுரை முத்துவின் மனைவி யாரையும் தப்பு தப்பா பேசாதீங்க, உங்களுக்கு பிரபலங்களாக தெரிகிறவர்கள் வீட்டில் கண்ணீர் தான் அதிகமாக சிந்திக் கொண்டிருக்கிறார்கள் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Robo Shankar s daughter s marriage interview with Madurai Muthu s wife

அந்த வகையில் ரோபோ சங்கர் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி வெள்ளி திறையில் முன்னணி நடிகர்களோடு காமெடி கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய உழைப்பால் இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கும் ரோபோ சங்கருக்கு ஒரே ஒரு மகள் இந்திரஜா சங்கர் இருக்கும் நிலையில் இந்திரஜா சங்கர், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார்.

அதற்கு பிறகு சின்னத்திரையிலும் வெள்ளி திரைகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு அவருடைய மாமா கார்த்திக்கோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஒரு வாரங்களாக இவர்களுடைய திருமணம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து திருமணம் மதுரையில் நடைபெற்றிருக்கும் நிலையில் ரிசப்ஷன் சென்னையில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் மதுரை முத்துவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது மதுரை முத்துவின் மனைவி அங்கு மைக்கில் பேசியிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில் உங்களுக்கு பிரபலங்களாக தெரியும் எங்களுடைய வீட்டில் கண்ணீர் தான் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

எங்களுடைய ஜன்னலை நீங்கள் எட்டிப் பார்க்க வேண்டாம். எங்களுடைய வீட்டில் சிரிப்பு மயமாக மாற வேண்டும் என்றால் அது மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. இஷ்டத்துக்கு எழுதுவதும்.. அழகான வார்த்தைகளால் சுரண்டி பார்க்கிறதும் வேண்டாம். ஒவ்வொரு திறை பிரபலங்கள் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத பல பிரச்சனைகள் இருக்கும். என்னையே எடுத்துக் கொண்டால் என்னை போட்ரேட் பண்ணின விஷயம் வேற மாதிரி.

ஒரு சிலர் புகழுக்காகவும் பணத்திற்காகவும் அடுத்தவர்களுடைய குடும்பத்தை பயன்படுத்தி தவறான வழியில் பெயரும் புகழும் அடைய வேண்டும் என்று பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி வருவதற்காக பல குடும்பங்கள் ரொம்ப கஷ்டப்படுறோம். அதனால நீங்க கைதட்டுகள் கொடுக்கலாட்டும் பரவாயில்லை யாருடைய குடும்பத்தையும் யாரும் கெடுக்க வேண்டாம்.

எங்களுக்கு அன்பை மட்டும் கொடுங்க, எல்லாருடைய குடும்பமும் நல்லா இருக்கணும் என்று மட்டும் நினைங்க.. திரை துறையில் இருப்பவர்களுக்கும் சோகங்களும், வேதனைகளும் இருக்கும்... அவங்களும் உங்களை மாதிரி ஒரு மனுசங்க தான் என்று நீங்க புரிஞ்சுகிட்ட போதும் என்று அந்த பேட்டியில் மதுரை முத்து மனைவி உருக்கமாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+