சார் மெதுவா சார்... அத்தை வேற குழந்தை வேணும்னு ஆசைப்படறாங்க...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் நதியா கெஸ்ட் ரோலில் வந்துட்டு போனது எல்லாருக்கும் பிடிச்சுதான் இருந்துச்சு. அவங்க அர்ஜூனுக்கும், ராஜாவுக்கும் நிறைய புத்திமதி சொல்லிட்டு போனாங்க.
சரி, ஒருவருக்கு ஒருவர் லவ்வை சொல்லிக்கலாம்னு மனசாட்சியை கேட்டு முடிவு செய்துட்டு ரூமுக்கு வர்றாங்க. ரோஜா மறுபடியும் பழைய நாடகத்தை தொடர நதியா மேடம் நம்ம நடிப்பை நம்பிட்டாங்க சார்னு போய் சொல்ல...
அர்ஜுனும் என்னிடமும் நதியா மேடம் அப்படித்தான் பேசினாங்கன்னு சொல்றான். நீ பொய் சொல்லும்போது நான் மட்டும் ஏன் உண்மையை சொல்லணும்னு மனசுக்குள்ள சொல்லிக்கறான்.

வாய்தான்
நதியா மேடம் என்கிட்டே அர்ஜுன் உனக்கு ஏத்த ஜோடிதான்... ஆனா வாய்தான் கொஞ்சம் நீளம்னு சொல்ல, என்னன்னு கேட்கறான் அர்ஜுன். சார் நதியா மேடம் சொன்னதைத்தான் சார் சொல்றேன். உனக்கு கிடைச்ச குடும்பம் நல்ல குடும்பம், அத்தை, ரொம்ப நல்லவங்கன்னு சொன்னாங்க சார். ஆமா, உங்ககிட்ட நதியா மேடம் என்ன சார் சொன்னாங்கன்னு கேட்கறா.

இளிச்ச வாய்
ரோஜா ஒரு இளிச்ச வாய்னு அவன் சொல்லும்போதே.. என்ன சார்னு ரோஜா கேட்க நதியா மேடம்தான் அப்படி சொன்னாங்க.. அதாவது இன்னொசென்ட்னு சொல்றதை அப்படி கலோக்கியலா சொன்னாங்க. அதனால அவளை பத்திரமா பார்த்துக்க.. எங்கியாவது திருவிழாவுல அழைச்சுட்டு போயி தொலைச்சுடாதேன்னு சொன்னாங்கன்னு சொல்றான்.

படுக்கை
ரோஜா தரையில் படுக்கையை விரிக்கப் போக, ஏன் ரோஜா கீழ படுக்கற.. இத்தனை நாள் கட்டில்லதானே படுத்தே.. இன்னிக்கு என்னன்னு கேட்கறான். இத்தனை நாள் நதியா மேடம்காக கீழ படுத்தோம். அதுவும் இல்லாம உங்க மேல கையை, காலை போட்டு தூங்க விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன் சார்னு பேசும்போதே கல்பனா பால் எடுத்து வர்றதை பார்த்துடறான் அர்ஜுன்.

தூக்கி
உடனே கட்டிப்பிடிச்சு ரோஜா வாயைப் பொத்தி, ரோஜா எதுவும் பேசாதே..அம்மா வர்றாங்கன்னு சொல்லிட்டு தூக்கிக்கறான். அந்த ஃபேனை சுத்திவிடு ரோஜான்னு சொல்ல அவளும் சுத்திவிடறா. சார் பார்த்து சார்.. கீழ போட்டுடாதீங்க.. எனக்கு இடுப்பு உடைஞ்சுட போவுது.. அத்தை வேற குழந்தை பெத்து தரணும்னு ஆசையில இருக்காங்கன்னு சொல்றா ரோஜா.

போடாம
இதை பார்த்த கல்பனா என்னடா அர்ஜுன் பணறேன்னு கேட்க, ஃபேன் ஓடலைம்மா..அதான் சுத்திவிட சொன்னேன்னு சொல்றான். அவள் உள்ளே வந்து ஸ்விட்ச்சைப் பார்க்க, அது போடாமலே இருக்குது. முதல்ல அவளை இறக்கி விடு அர்ஜுன். பெரிய லாயர்.. ஸ்விட்ச் போடாம எப்படிடா ஃபேன் ஓடும்னு கேட்கறாங்க.

குழந்தை
பின்னர் மெதுவாக ரோஜாவிடம் வந்து..ரோஜா நான்கூட குழந்தை பெத்துக்கறதை நீங்க தள்ளி போட்டு இருக்கீங்களோன்னு நினைச்சு இருந்தேன்.. நீ பேசினதை கேட்டவுடனேதான் சந்தோஷமா இருக்கு. சொன்ன மாதிரி சீக்கிரமா ஒரு பேரனோ, பேத்தியோ பெத்து குடுத்துடு ரோஜான்னு சொல்றாங்க.
கல்பனா ஆசை நிறைவேறுமா? இல்லை நடிப்போட முடிச்சுக்கிட்டு ரோஜா ஆஸ்ரமத்துக்கு போயிருவாளா?
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications